சீனாவில் உள்ள ஷூயூன் வாட்டர் பார்க்கில், மிகப் பெரிய நீச்சல் குளம் உள்ளது. அந்த நீச்சல் குளத்தில், செயற்கை அலையை உருவாக்கும் இயந்திரம் ஒன்று இணைக்கப் பட்டுள்ளது.
இந்த வாட்டர் பார்க்கில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் அதிகமானோர் வருகை தருவது வழக்கமான ஒன்று. வழக்கம் போல நீச்சல் குளத்தில் 50க்கும் மேற்பட்டோர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது செயற்கை அலை உருவாக்கும் இயந்திரம், யாரும் எதிர்பாராத விதமாக மிகப் பெரிய சுனாமி பேரலையை உருவாக்கி யுள்ளது. இந்த விபத்தில் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அலை உருவாக்கும் இயந்திரத்தை இயக்கியவர், இயந்திரத்தை சரியாக இயக்காததே இந்த விபத்துக்கு காரணம் என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஷூயூன் வாட்டர் பார்க் நிர்வாகம் கூறுகையில், 'இயந்திரம் பழுதானதே இச்சம்பவத்து க்கு காரணம். ஊழியர் மேல் எந்த பிழையும் இல்லை' என கூறியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், நீச்சல் குளத்தில் மிகவும் ரிலாக்சாக நீராடிக் கொண்டிருந்த பலர், அலையால் வெளியே தூக்கி எறியப்படுவது தெரிகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வாட்டர் பார்க் மூடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for Your Comments