ஆர்டர் செய்த உணவு கேன்சல் எதற்காக - சொமட்டோ பதிலடி !

0
ஹோம் டெலிவரி ஆப் மூலம் வீட்டில் இருந்த படியெ உணவை ஆர்டர் செய்து உண்பது இன்று வழக்கமான ஒன்றாகி விட்டது. அப்படி ஆர்டர் செய்த உணவை சில காரணங் களுக்காக வாடிக்கை யாளர்கள் கேன்சல் செய்வதும் வழக்கம் தான்.
சொமட்டோ



அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜாபல்பூர் பகுதியில் சொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கை யாளர் ஒருவர், உணவை கேன்சல் செய்துள்ளார். இந்த உணவை ஆர்டர் செய்தவர் ஒரு இந்து.

எனவே, ஆர்டர் செய்த உணவை இந்து அல்லாத ஒருவர் எடுத்து வந்து டெலிவரி செய்வார் என்பதால், அதனை கேன்சல் செய்துள்ளார். மேலும் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தற்போது தான் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தேன்.
எனது உணவிற்கு இந்து அல்லாத ஒருவரை டெலிவரி பாயாக அனுப்பி யுள்ளனர். வேறு ஒருவரை மாற்ற முடியாது என்றும் கூறினர். மேலும் டெலிவரிக்கான பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என கூறினர். 




எனவே, எனது ஆர்டரை கேன்சல் செய்து, அந்த பணம் எனக்கு தேவை யில்லை என கூறிவிட்டேன்’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த சொமாட்டோ இந்தியா நிறுவனம் அவர் வெளியிட்ட பதிவை, தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஒரே வரியில், ‘உணவுக்கு மதமில்லை’ என குறிப்பிட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings