லண்டனில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அது. எந்நேரமும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக் கிறது. வயதான நோயாளிகளுக் காக ஒதுக்கப்பட்ட அறையும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக் கிறது.
வேறு அறையில் இல்லாத சிறப்பு முதிய நோயாளிகளுக்கான அறையில் மட்டுமே உள்ளது. அது மருத்துவ மனை என்கிற உணர்வையே மறக்கடிக் கிறது.
அங்கே இருந்து கேட்கும் சிரிப்பு சத்தத்தில் மருத்துவ மனையே அதிர்கிறது. ஆனால், ஒரு நர்ஸ் கூட அங்கே இல்லை. அப்புறம் எப்படி இவ் வளவு குதூகலமும், மகிழ்ச்சியும் என்கிறீகளா?
ஜோரா பாட்ஸ்தான் இந்தக் குதூகலத்து க்குக் காரணம். ஒரு நொடி கூட ஓய்வில்லாமல் விளையாட்டு, ஆடுவது, அங்கே இங்கே ஓடுவது என்று நோயாளிகளை மருத்துவ மனையில் இருக்கிற ஒரு உணர்வே இல்லாமல் வைத்திருக்கி றாள்.
ஒரு பேரன், பேத்தியைப் போல ஜோராவை அங்கிருக்கும் முதியவர்கள் கொண்டாடுகி றார்கள்.
தவிர, குழந்தைகள் மருத்து வரைப் பார்க்கும் நேரத்துக்காக காத்திருக்கும் இடை வெளியில் அவர்களுக்கு கல்வி ரீதி யான விளையாட்டு களைச் செய்து காட்டி உற்சாகப் படுத்துகிறது ஜோரா.
முதியவர்களை யும் குழந்தை களையும் கவனிப் பதற்காக பிரத் யேகமாக உருவாக் கப்பட்ட ஒரு ரோபோதான் ஜோரா. உலகின் முதல் ஹெல்த்கேர் எந்திரனும் ஜோரா தான்.
இதற்கென இருக்கும் மென்பொருளை தரவிறக்கம் செய்து லேப்டாப்பில் அப்லோடு செய்து விட்டால் போதும். லேப்டாப் வழியாகவே ஜோராவின் செயல் பாடுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
ஹெச்.டி.கேமரா, மைக்ரோ போன், தொட்டு உணர டேக்டைல் சென் சார் உட்பட பல வசதிகள் இதில் இருக்கின்றன. இந்த ரோபோவுக்கு எந்தப் பயிற்சியும் நாம் கொடுக்க வேண்டிய தில்லை என்பது இதில் ஹைலைட்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸில் மட்டும் ஆயிரக் கணக்கான ஜோராக்கள் மருத்துவ மனைகளை சந்தோஷ கூடாரங் களாக மாற்றிக் கொண்டிருக்கின் றன.
இரண்டு வருட உத்தர வாதத்துடன் கிடைக்கும் இந்த எந்திரனின் விலை ரூ.3.54 லட்சம். ‘‘என்ன இருந்தா லும் ஒரு மனிதனின் வெதுவெதுப்பான அரவணைப்பை ரோபோக்களால் தர முடிவதில்லை...’’ என்கிறார் ஒரு முதிய நோயாளி.
Thanks for Your Comments