ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எதற்கெல்லாம் லஞ்சம் தெரியுமா? - `ஸ்கேன்' ரிப்போர்ட் !

0
லஞ்சத்தின் நடமாட்டம் அதிகம் உள்ள அரசுத் துறைகளில் போக்குவரத்துத் துறையும் ஒன்று. வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலங் களுக்குள் (ஆர்.டி.ஓ.) விவரம் தெரியாமல் நுழைபவர்களின் பாக்கெட் காலியாகி விடும். புரோக்கர்கள் மூலம் தான் வட்டாரப் போக்குவரத்துத் துறையின் அன்றாடப் பணிகள் நடப்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். 
ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எதற்கெல்லாம் லஞ்சம்



இதனால் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் சந்தேகப் பார்வை இந்தத் துறையின் மீது எப்போதும் இருக்கும். லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினாலும் அதிகாரிகள் தப்பி விடுவது வாடிக்கை. போக்கு வரத்துத் துறையில் லஞ்சத்தைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 

இருப்பினும், அங்கு லஞ்சம் பெறப்படுவது குறைந்த பாடில்லை. போக்குவரத்து அலுவலகங் களுக்கு டிரைவிங் லைசென்ஸ் (இருசக்கர வாகனம், கார்) டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பு, புதிய வாகனப்பதிவு, எப்.ஃசி, டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை களுக்காகச் செல்லும் பொதுமக்கள் சந்திக்கும் அனுபவங்கள் பல.

தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங் களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் குறித்த தகவல் களைச் சேகரித்தபோது அவை அதிர்ச்சிகரமாக இருந்தன. அதன் ஸ்கேன் ரிப்போர்ட் விவரங்கள் இது.
திருத்தணியில் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகத்து க்குச் சென்று அங்குள்ள நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவு செய்தோம். அப்போது, அலுவலகத்தி லிருந்த புரோக்கர்கள் அங்கிருந்து எஸ்கேப் ஆனது தனிக்கதை.

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு முன் எல்.எல்.ஆர். என்றழைக்க ப்படும் ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வசதி உள்ளது. டூ வீலர் லைசென்ஸ் (எல்.எல்.ஆர்) பெற கட்டணமாக ரூ.230-ம் (சிங்கிள் கிளாஸ்) ரூ.380-ம் (டபுள் கிளாஸ்) நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

கார்களுக்கு சிங்கிள் கிளாஸ் ரூ.800-ம், டபுள் கிளாஸ் ரூ.1,100-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், டிரைவிங் ஸ்கூல் மூலமாகத்தான் பெரும் பாலானவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெறுகின்றனர். இதற்கு, போக்குவரத்துத் துறை அலுவலகங் களின் அணுகு முறையே முக்கியக் காரணம்.
மோட்டார் வாகன ஆய்வாளர்
அதாவது, தனிப்பட்ட முறையில் ஆன்லைன் மூலம் எல்.எல்.ஆர் பெற விண்ணப்பிக்கும் போது அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பொது மக்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. இதனால் தான் 99 சதவிகிதத்தினர் டிரைவிங் ஸ்கூல் மூலம் விண்ணப்பிக் கின்றனர். 

மோட்டார் வாகன ஆய்வாளர் முன்னிலையில் டூவீலர், கார்களை ஓட்டிக் காட்டும் போது செய்யும் தவறுகள் சரி கட்டப் படுகின்றன. தனிப்பட்ட முறையில் சென்றால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்து க்குத் தள்ளப் படுகின்றனர். 
முகவரி மாற்றத்துக்கு ரூ.520-ம், பெயர் மாற்றத்துக்கு டூவீலருக்கு ரூ.175-ம், காருக்கு ரூ.325-ம், ஆட்டோவுக்கு ரூ.525-ம் இதர போக்குவரத்து வாகனங் களுக்கு ரூ.775-ம் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது... அரசு அறிவிப்பு !
தவறுகளைச் சரிக்கட்ட அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட இருமடங்கு அல்லது மூன்று மடங்கு கூடுதல் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் டூவீலர் லைசென்ஸ் பெற 5,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. 



இந்தத் தொகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் பதவிக்கேற்ப பகிர்ந்தளிக்கப் படுகிறது. இதை யடுத்து புதிய வாகனங்களைப் பதிவுசெய்ய அரசின் கட்டணம் டூவீலருக்கு ரூ.300-ம், காருக்கு ரூ.600-ம், ஆட்டோ அல்லது இதர வாகனங்களு க்கு ரூ.1,000-மும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

ஆனால், சம்பந்தப்பட்ட ஷோரூம்களில் இந்தக் கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தத் தொகையிலும் ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளு க்கும் பங்குள்ளது.

முகவரி மாற்றத்துக்கு ரூ.520-ம், பெயர் மாற்றத்துக்கு டூவீலருக்கு ரூ.175-ம், காருக்கு ரூ.325-ம், ஆட்டோவுக்கு ரூ.525-ம் இதர போக்குவரத்து வாகனங்களு க்கு ரூ.775-ம் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆனால், புரோக்கர்கள் மூலம் தான் 99 சதவிகிதம் இந்தப் பணிகள் நடக்கின்றன. 

இதனால் புரோக்கர்கள் கமிஷன், அதிகாரிகளின் கமிஷன் என இந்தக் கட்டணத்தை விட 5 மடங்கு வரை கூடுதல் கட்டணம் பொது மக்களிடம் பெறப்படுகிறது. இதுதவிர, ஆர்.டி.ஓ. அலுவலகங் களில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிகளும் புரோக்கர்கள் இல்லாமல் நடைபெறுவ தில்லை. 
போக்குவரத்துத் துறையின், 'சாரதி' என்ற இணையதளம் மூலம் புரோக்கர்கள் எளிதில் விண்ணப்பித்து காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொள்கின்றனர். இதை விட பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள் (பஸ், லாரி சர்வீஸ்) ஆகியவற்றின் மூலம்தான் வட்டார போக்குவரத்து அலுவலங்களு க்குப் பணமழை கொட்டுகிறது. 

ஒவ்வொரு பள்ளி வாகனங் களுக்கும் குறிப்பிட்ட தொகை மாமூலாகக் கொடுக்கப் படுகிறது. அதுபோல பஸ், லாரி மற்றும் இதர வாகனங்களுக்கும் சம்பந்தப் பட்டவர்கள் மூலம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கவனிக்கப் படுகின்றனர். 
புரோக்கர்கள் கமிஷன்
வாகனங் களுக்கான பெர்மிட்டை ஆர்.டி.ஓ அலுவ லகம் முதல் மேலிடம் வரை `வைட்டமின் சி' இல்லாமல் ஃபைல்கள் நகருவதில்லை. வாகனங்களின் உரிமையாளர் களுக்கும் அதிகாரிகளு க்கும் டீலிங் பேசத் தனி புரோக்கர்கள் உள்ளனர். 

ஒவ்வொரு ஆர்.டி.ஓ. அலுவலகங்களி லிருந்தும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை (சில எல்கள்) அமைச்சர் தரப்பினருக்கு மாமூலாகக் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. மேலும், மாமூல் தொகை அதிகம் கிடைக்கும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பணியாற்ற கடுமையான போட்டி நிலவுகிறது. 

இதற்கு ஆர்.டி.ஓ. பதவிக்கு 25 எல் வரையிலும் மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு 10 எல் வரையிலும் இடமாறுதலு க்காக வசூலிக்கப் படுகிறது. இதற்கென தனி நெட்வொர்க் செயல் படுகிறது.



பூந்தமல்லி, திருவான்மியூர், அண்ணா நகர், செங்குன்றம், கே.கே.நகர், வளசரவாக்கம், தாம்பரம், அயனாவரம், அம்பத்தூர் ஆகிய 9 ஆர்.டி.ஓ-க்களில் பணியாற்ற கடும் போட்டி நிலவுகிறது. இந்த ஆர்.டி.ஓ. அலுவலங்களில் மற்ற அலுவலகங் களை விட அதிகளவில் வருவாய் கிடைக்கும். 

இதனால் இந்த அலுவலகங் களில் வழக்கமான மாமூல் தொகையை விடக் கூடுதல் பணம் வசூலிக்கப் படுகிறது. மேலிடத்துக்குப் பணம் கொடுக்க வேண்டிய துள்ளதால் தான் ஆர்.டி.ஓ. அலுவலகங் களில் தாராளமாக லஞ்சம் தாண்டவ மாடுகிறது. 

இது தவிர, மாதத்தில் சில நாள்கள் வாகனச் சோதனை யிலும் ஆர்.டி.ஓ-க்கள் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஈடுபடுவதுண்டு. மேலும், விபத்தில் சிக்கும் வாகனங்களை ஆய்வு நடத்தவும் அந்த ஃபைல்களில் கையெழுத்திடவும் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 
இவ்வாறு எதற்கெடுத் தாலும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பணம் இல்லாமல் எந்தப் பணிகளும் நடைபெறுவ தில்லை என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். அம்பத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேரில் சென்றோம். 

அப்போது, புதிய வாகனப் பதிவு மற்றும் டூவீலர், கார் டிரைவிங் லைசென்ஸ் பெற ஏராளமான வர்கள் அம்பத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் கூடியிருந்தனர். காரிலிருந்து இறங்கிய மோட்டார் வாகன ஆய்வாளருக்கு மரத்தடி நிழலில் இருக்கை கொண்டு வந்து போட்டார், புரோக்கர் ஒருவர். 
கார் டிரைவிங் லைசென்ஸ்
அதில் அமர்ந்த அந்த ஆய்வாளரின் கையில் ஃபைல்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்தார், இன்னொருவர். வாகனத்தின் இன்ஜின் நம்பர், சேஸ் நம்பர் ஆகிய வற்றை சத்தமாகச் சொல்ல அதை ஆய்வாளர் சரி பார்த்தார். அடுத்து, டிரைவிங் லைசென்ஸ் பெறக் காத்திருந்தவர்கள் வாகனத்தை ஓட்டிக் காட்டினர். 

அதனடிப் படையில் பாஸ் அல்லது பெயில் என ஆய்வாளர் டிக் அடித்தார். அதன்பிறகு மீண்டும் ஆய்வாளர் ஆர்.டி.ஓ. அலுவலகத் துக்குச் சென்றார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் புரோக்கர்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. 

அலுவலக வளாகத்து க்குள் நுழைந்தவுடன் புன்சிரிப்போடு வரவேற்கும் புரோக்கர்கள் தினமும் குறைந்த பட்சம் 5,000 ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிப்பதாக விவரம் தெரிந்தவர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இதே நிலைமை தான் உள்ளது. 

மாவட்டத்துக்கு மாவட்டம் புரோக்கர்கள் வசூலிக்கும் கட்டணம் வித்தியாசப் படுமே தவிர, லஞ்சம் கொடுக்காமல் போக்குவரத்துத் துறை அலுவலகங் களில் எந்தக் காரியமும் நடப்பதில்லை.
இது குறித்து பெயரைக் குறிப்பிட விரும்பாத ஆர்.டி.ஓ -க்கள் சிலர் நம்மிடம், `ஆர்.டி.ஓ. அலுவலகங் களில் லஞ்சம் பெறப்படுவதாகச் சொல்லப்படும் குற்றச் சாட்டுக்கள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆர்.டி.ஓ. அலுவலகம் என்றாலே பணமில்லாமல் எந்தக் காரியமும் நடக்காது என்ற மனநிலை மக்களிடையே உள்ளது. 
ஆன்-லைன் சேவையை அறிமுகப் படுத்தியபிறகு ஆர்.டி.ஓ. அலுவலகங் களில் பணப்பரிவர்த் தனைக்கு வாய்ப்புகள் இல்லை. 
அதே நேரத்தில் குறிப்பிட்ட சில ஆர்.டி.ஓ அலுவலகங் களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்காலிக ஊழியர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. 
அவர்கள் தான் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் புகாரில் சிக்குகின்றனர்.... ஆர்.டி.ஓ.
ஆன்-லைன் சேவையை அறிமுகப்படுத்திய பிறகு ஆர்.டி.ஓ. அலுவலகங் களில் பணப் பரிவர்த்தனைக்கு வாய்ப்புகள் இல்லை. அதே நேரத்தில், குறிப்பிட்ட சில ஆர்.டி.ஓ. அலுவலகங் களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்காலிக ஊழியர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ள படுகின்றன. 

அவர்கள் தான் பொது மக்களிடம் லஞ்சம் வாங்கும் புகாரில் சிக்குகின்றனர். பொது மக்களுக்குப் போதிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தினா லும் புரோக்கர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது. 
ஆன்-லைன் சேவையை அறிமுகப்படுத்திய ஆர்.டி.ஓ.



ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்சம் யாராவது கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்" என்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் கேட்ட போது, ``குறிப்பிட்ட அரசுத் துறைகளைத் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணித்து வருகிறோம். 

அதில் போக்குவரத்துத் துறையும் ஒன்று. போக்குவரத்துத் துறை அலுவலகங் களில் எங்களுக்குக் கிடைக்கும் ஆதாரங்கள், புகார்கள் அடிப்படையில் அதிரடிச் சோதனை நடத்திவருகிறோம். புரோக்கர்கள் தான் அதிகளவில் எங்கள் சோதனையில் சிக்கி வருகின்றனர்" என்றனர்.

இது குறித்து போக்குவரத் துறை கமிஷனரைத் தொடர்பு கொண்ட போது அவர் மீட்டிங்கில் இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். பல தடவை அவர் தொடர்பு கொண்டபோதும் அவரிடம் பேச முடியவில்லை.
டிரைவிங் ஸ்கூல் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் ‘ஆன்லைன் வசதி அமல்படுத்திய பிறகு, டிரைவிங் ஸ்கூல் வருமானம் குறைந்து விட்டது. ஆனால், 'நாங்கள் தான் ஆர்.டி.ஓ. அலுவலக புரோக்கர்கள்' என்று சிலர் தவறான தகவல்களைக் கூறி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் எங்கள் சங்கத்தில் 7,600-க்கும் மேற்பட்ட டிரைவிங் ஸ்கூல்கள் உள்ளன. கோவையில் தான் எங்களின் தலைமை அலுவலகம் உள்ளது. தற்போதுள்ள நிலைமை நீடித்தால் டிரைவிங் ஸ்கூல்களை மூடி விட்டுச் செல்லும் நிலையில் தான் உள்ளோம்" என்றார்... விகடன்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings