அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சேஸ் டெக்கர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வுக்காக கலிபோர்னியா வில் உள்ள மான்டேரி விரிகுடா கடற்கரையில் படகில் சென்று கொண்டிருந்தார்.
கடலில் இருந்த மீன்களையும், மேலே பறந்து கொண்டிருந்த பறவை களையும் தனது கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது படகுக்கு அருகே வாயைப் பிளந்து கொண்டு வந்த கூன் முதுகு திமிங்கலம் ஒன்று கடல் சிங்கத்தை கடித்து விழுங்க முயற்சித்தது.
அதை, சேஸ் டெக்கர் தத்ரூபமாக படம் பிடித்தார். தன் வாழ்விலேயே மிக அரிய காட்சியைக் கண்டுவிட்டதாக கூறி அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
மேலும், திமிங்கலம் வாயை மூடுவதற்குள் கடல் சிங்கம் நழுவி வேகமாக நீந்தி, நூலிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, திமிங்கலத்தின் வாயில் கடல் சிங்கம் சிக்கிய போது எடுக்கப்பட்ட அந்த அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thanks for Your Comments