யாரோ பண்ணின தப்புக்கு நான் கஷ்டப் படுறேன். இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம்?" என்று புலம்பிக் கொண்டிருக் கிறவர்களு க்கு புது நம்பிக்கை அளிக்கும் ஒரு தகவல்... உத்தர பிரேதேசம் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராம்குமார் சிங்.
அவரது மனைவி கல்பனா சிங். கல்பனாவுக்கு கான்பூரில் உள்ள மருத்துவ மனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மருத்துவர்கள், குழந்தை இறந்து பிறந்திருக்கிறது என்று போட்டு விட்டனர்.
குழந்தையை கவனித்த உறவினர் ஒருவர், உயிரோடு இருப்பதை கவனித்து தூக்கி யுள்ளார். பிறந்ததும் உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்காத தால் அப்பெண் குழந்தை மாற்றுத் திறனாளியாய் வளர்ந்தது. அந்தப் பெண்ணின் பெயர் நூபுர் சிங்.
பன்னிரண்டரை லட்சம் பரிசு
பிரபல நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 12 கேள்வி களுக்கு சரியான விடை கூறி 12.5 லட்சம் ரூபாய் பரிசை நூபுர் சிங் வென்றுள்ளார்.
புத்திசாலி பெண்
இண்டர்மீடியட் வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்ற நூபுர் சிங், ஆசிரியை பயிற்சியான பி.எட். படிப்புக் கான நுழைவு தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார் என்றும் நூபுர் சிங் புத்திசாலியாய் வளர்ந்தார் என்றும் அவரது அம்மா கல்பனா சிங் கூறி யுள்ளார்.
மனத்தளர்ச்சி
வழக்கமாக 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை தொலைக் காட்சியில் பார்க்கும்போது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர் கேள்விக்குப் பதில் கூறும் முன்பே மகள் நூபுர் பதில் கூறி விடுவாள் என்று தெரிவித்துள்ள கல்பனா,
மகள் மாற்றுத் திறனாளி யாவதற்கு காரணமான மருத்துவர்கள் மேல் தனக்கு எந்த வருத்தமும் இல்லை யென்றும் கூறியுள்ளார்.
எந்நிலையி லும் வாழ்வில் மனந்தளர்ந்து விடக்கூடாது என்பதற்கு நூபுரின் வெற்றி நல்ல உதாரணம்.
Thanks for Your Comments