மகாராஷ்ட்ரா மாநிலம் நவி மும்பைக்கு அருகில் உள்ள உரான் என்ற இடத்தில் பொதுத்துறை நிறுவனத்து க்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி ஆலை இயங்கி வருகிறது.
அங்கு வழக்கம் போல் இன்று காலை முதல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
காலை 7 மணியளவில் ஆலையில் உள்ள கச்சா எண்ணெய் வடிகால் பகுதியில் திடீரென தீ பற்றியுள்ளது. இதை யடுத்து உடனடியாக தீயணைப்புத் துறை யினருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள், தீ மற்ற இடங்களுக்கும் பரவத்தொடங்கி யுள்ளது. தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஊழியர்கள், ஆலை யிலிருந்த அனைத்து கச்சா எண்ணெய் குழாய்களையும் மூடியுள்ளனர்.
தொழிலாளர் களின் துரித நடவடிக்கை யால் மிகப் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது. இதை யடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐந்து ஓ.என்.ஜி.சி தொழிலாளர்கள் மற்றும் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந் துள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். மேலும் இருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `இன்று காலை உரான் ஆலையின் வடிகால் பகுதியில் ஏற்பட்ட தீ, அடுத்த இரண்டு மணி நேரங்களில் அணைக்கப் பட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி -யின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக ளால் தீ விபத்து முறையாகக் கையாளப் பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி-யில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஆலையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு யாரும் அனுமதிக்கப் படவில்லை.
தொழிலாள ர்களின் வேலையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. ஆலையில் நடந்த தீ விபத்தால் மும்பையில் இன்று காலை முதல் கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படு கிறது.
Thanks for Your Comments