தமிழக அரசு, குறித்த நேரத்தில் நிலங்களை கையகப்படுத்தி தராததால், ரூ.3,600 கோடி மதிப்பிலான 3 நெடுஞ்சாலை திட்டங்களை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை (NH) 45ல் விழுப்புரம் – புதுச்சேரி நான்கு வழிச்சாலை, பூண்டியாங் குப்பம் – சட்டநாதபுரம் இணைப்புச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை (NH) 227 திருச்சி – சிதம்பரம் வழித்தடத்தில்
மீன்சுருட்டி – சிதம்பரம் இடையே இருவழிச்சாலை உள்ளிட்ட 3 நெடுஞ்சாலை திட்டங்கள், மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜ்னா ( முதற்கட்டம்) திட்டத்தின் கீழ் மேம்படுத் தப்பட இருந்தது.
இந்த 3 நெடுஞ்சாலை திட்டங்களுக் காக 473 ஹெக்டேர் நிலங்கள் கையகப் படுத்தப்பட வேண்டி யிருந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி 18 மாதங்கள் கடந்த பின்னரும், மாநில அரசால் 385 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே கையகப் படுத்த முடிந்துள்ளன.
இதனை யடுத்து, இந்த நெடுஞ்சாலை திட்டங்களுக் காக 2018-19ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெற்றுக் கொள்ளப் படுவதாக
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர் நாகேந்திர நாத் சின்கா, தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகத்து க்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.
மாநில அரசு இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்கும் பட்சத்தில், இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த NHAI தயாராக இருப்பதாக NHAI உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நெடுஞ்சாலை திட்டங்களால், சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் துறை முகங்களுக்கு இடையே கனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.
இதன் காரணமாக, அதிக ஏற்றுமதியின் விளைவாக நாட்டின் மற்றும் மாநிலங்களின் பொருளாதாரம் மேம்பட வழிவகை ஏற்படும். சென்னை – நாகப்பட்டினம் செல்ல விரும்புவோர்,
இசிஆர் சாலையின் வழியாக செல்ல முடிவதால், அவர்களது பயண நேரம் குறையும். இந்த நெடுஞ்சாலை திட்டங்களின் மூலம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளின் பொருளாதாரம் மேம்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஆங்காங்கே எதிர்ப்பு கிளம்பி யுள்ளதாலும், இத்திட்டத்திற் காக நிலங்களை தருபவர்க ளுக்கு உரிய இழப்பீடு தர காலக்கெடு,
மாநில அரசால் நிர்ண யிக்கப்படாத காரணத்தி னாலும் குறித்த நேரத்தில் நிலங்களை கையகப்படுத்த இயல வில்லை மாநில அரசின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments