படத்தில் நீங்கள் காண்பது 600 ஆண்டுகள் பழமையான கயிற்றுப் பாலத்தை. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்கு முன்பான ப்ரீ-அமெரிக்க நிலப்பகுதி களை ஆட்சி செய்து வந்த இன்கா பேரரசின் அரிய கண்டுபிடிப்பு இது.
தவிர, இன்கா பேரரசின் சாலைப் போக்குவரத்துத் துறையின் முக்கிய அம்சமாக இருந்ததும் இந்தக் கயிற்றுப் பாலமே.
மெக்சிகோ, வெனிசுலா, பொலிவியா காடுகளில் விளையும் புற்களைக் கொண்டு கயிறை நெய்திருப் பதால் புல் பாலம் என்றும் இதை அழைக்கின்றனர்.
பெரு நாட்டில் அபுரிமேக் நதிக்கு குறுக்கே அமைந்துள்ள இக்கயிற்றுப் பாலத்தை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கி றார்கள். பெண்கள் புற்களைக் கொண்டு கயிறை நெய்து தருவார்கள்.
விக்கெட் கீப்பர்களுக்கு நடக்கும் சோகம் - விரல் போன கதை !
ஆண்கள் பாலம் கட்டுவார்கள். பழைய பாலத்தை அப்படியே நதியில் போட்டு விடுவார்கள். மூன்றே நாட்களில் பாலம் கட்டும் வேலை முடிந்து விடும்.
இப்போதும் இந்தப் பாலத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள். பாலம் கட்டும் பணியில் எந்த விதமான இயந்திரமும் பயன் படுத்தாதது தான் ஹைலைட்.
Thanks for Your Comments