அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை யில் 5080 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
14 நாள் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் பிரிட்டன் சென்றார்.
அங்கிருந்து அமெரிக்கா சென்ற அவர், நியூயார்க்கில் நடைபெற்ற தொழில் முதலீட்டா ளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதில் ஜீன் மார்ட்டின், எமர்சன், ஏஸ்பியர் கன்சல்டிங் , ஜோகோ ஹெல்த் உள்ளிட்ட 16 நிறுவனங் களுடன் தமிழகத்தில் 2,780 கோடி ரூபாயில் தொழில் துவங்கு வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலை யில் கையெழுத்தாகின.
தொடர்ந்து அமெரிக்கா வின் தொழில் நகரமான சான் பிரான்சிஸ்கோ சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் வரவேற் பளிக்கப் பட்டது.
பின்னர் சான் ஹூசே நகரில் நடைபெற்ற முதலீட்டா ளர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
நியூயார்க்கில் நடைபெற்ற #InvestorsMeet -ல், Jean Martin, Aquil Systems, Scitus Pharma, Nurray Chemicalsm Novitium Labs, Jogo Health, ST LNG, Saram 4, Emerson, Aspire Consulting, Revature - LLC, Zillion Technologies உள்ளிட்ட16 நிறுவனங்களுடன் #MoU கையெழுத்தாகியுள்ளது. #US_INDIA— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 4, 2019
இதில் லிங்கன் எலக்ட்ரிக், கால்டன் பயோடெக், கிளவுட் லேர்ன் உள்ளிட்ட தொழில் நிறுவனங் களும், TIE GLOBAL, கூகுள் எக்ஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என 19 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இந்த நிறுவனங் களுடன் சுமார் 2,300 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலம் 6,500-க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும். அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எம்.சி.சம்பத் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Thanks for Your Comments