திருச்சியில் சமீப காலமாக கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது. போதைப் பொருட்களின் விற்பனை அதிகமாக நிலையில் இளம் ரவுடிகளின் அட்டகாசமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சமீபத்தில் காஜாப் பேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் சேர்ந்து மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் போதைப் பொருட்களின் ஆதிக்கம் காஜாப்பேட்டை பகுதியில் பெரிதும் காணப்படு கிறது.
இதனால் எங்கள் பகுதி இளைஞர்கள் அனைவரும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி கெட்டுப் போகின்றனர்.
இது தொடர்பாக காவல் துறையிடம் பலமுறை இந்த பிரச்சனையை குறித்து புகார் சொல்லியும் அவர்கள் பெரிதாக நடவடிக்கை மேற்கொள்ள வில்லை,
ஏனென்று கேட்டால் கஞ்சா விற்பனை செய்வது போன்ற வீடியோக் களை ஆதாரமாகக் கொண்டு வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள்.
நாங்கள் புகார் சொன்னதற் காக பெரிய அளவில் உள்ள வழக்குகளை எண்ணிக்கைக் காக மட்டுமே கைது செய்கின்றனர்.
பிறகு மீண்டும் வெளியே வந்து கஞ்சா விற்பனையை நடத்த தொடங்கி விடுகின்றனர்.
எனவே போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து விற்பவர்கள் மீது புகார் அளித்தனர்.
இதை யடுத்து நேற்று இரவு காஜாப் பேட்டை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து செல்போனை திருட முயற்சித் துள்ளது.
அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து, அடித்து கண்டித்து அனுப்பி யுள்ளனர்.
பின்னர் இன்று காலை அக்கும்பல் திருட முயன்ற வீட்டிற்குள் புகுந்து வீட்டினுள் இருந்தவர் களை ஆயுதங்க ளால் தாக்கி விட்டு சென்றது.
இதில் படுகாய மடைந்த காமராஜ் என்பவர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அனைவரும் இன்று காலை பெல்ஸ் ரவுண்டானா அருகே
சாலை மறியலில் ஈடுப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தர்னாவில் ஈடுப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கரை இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தாஸ் விசாரணை செய்தார் விசாரணையில்
விமல்ராஜ் (21), விஜயபாபு (22), அலெக்ஸ் (21), ஜெஸ்வின் (21) ஆகியோர் இச்சம்பத்தில் ஈடுப்பட்டிரு ந்தது தெரிய வந்தது.
அதனடிப் படையில் அந்நான்கு பேரையும் பிடித்து விசாரித்ததில் கஞ்சா போதையில் இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.
மேலும் இந்நான்கு பேர் மீதும் ஏற்கனவே பல்வேரு வழக்குகள் பாலக்கரை காவல் நிலையத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
திருச்சியில் போதை பொருட்களின் விற்பனை அதிகரிக்க குற்றச் செயலும் பெருகிக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் பெருமளவு பாதிக்கப் படுவது பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்களே.
"தவறுகளை தட்டிக் கேட்க வேண்டிய காவல் துறையே தட்டிக் கொடுத்து செல்கிறது." என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
Thanks for Your Comments