பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதியில் அவ்வபோது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
குறிப்பாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித் துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடந்த 10ம் தேதி எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த சண்டையில் 2 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இவர்களின் சடலங்கள் ஹாஜிப்பூர் பகுதியில் இருந்தன.
இதனை யடுத்து பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளைக் கொடி காட்டி அவர்களின் சடலங்களை கொண்டுச் சென்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி யுள்ளது.
#WATCH Hajipur Sector: Indian Army killed two Pakistani soldiers in retaliation to unprovoked ceasefire violation by Pakistan. Pakistani soldiers retrieved the bodies of their killed personnel after showing white flag. (10.9.19/11.9.19) pic.twitter.com/1AOnGalNkO— ANI (@ANI) September 14, 2019
Thanks for Your Comments