முழுவதும் மின்சாரத்தில் இயங்கும். ஓட்டுனர் இல்லாமல், தானாகவே வானில் பறந்து பயணியர், பொருட்களை சுமந்து செல்லும்.
ஏற்கனவே பல வகை, 'ட்ரோன்'களை தயாரித்து பிரபலமான சீனாவின், 'ஈஹாங்' தற்போது, குவாங்சு பகுதியில் வான் வாடகை ஊர்திகளை வெள்ளோட்டம் பார்க்க ஆரம்பி த்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஈஹாங் நடத்தி வரும் ஆராய்ச்சிகள், இந்த வெள்ளோட்ட த்திற்கு உதவும். முழுவதும் பேட்டரியால் இயங்கும் ஈஹாங் ட்ரோன்கள், நான்கு உந்து விசிறிகளைக் கொண்டவை.
வானில் குறைவான உயரத்தில் பறக்கும் ஈஹாங் ட்ரோன்களுக்கு, இப்போதைக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கப் போவதில்லை.
எனவே பயணியரையும் பொருட்களை யும் பத்திரமாக, விரைவாக கொண்டு போய் உரிய இடத்தில் இறக்கி விட்டு திரும்பும் திறனை அது பெற்றுள்ளது.
ஏதாவது காரணங்களால், திடீரென பேட்டரியில் மின்சாரம் குறைந்து விட்டால், இன்னொரு ரிசர்வ் பேட்டரி மின்சாரத்தை வைத்து ஈஹாங் ட்ரோன் பத்திரமாக தரை இறங்கி விடும்.
அதே போல விசிறியில் பழுது ஏற்பட்டாலும், மீதமுள்ள உந்து விசிறிகளைப் பயன்படுத்தி தரை இறங்கி பயணியரை காப்பாற்றி விடும்.
நெரிசல் மிக்க நகரமான குவாங்சுவின் நிர்வாகம், ஈஹாங்கின் ட்ரோன் வெள்ளோட்ட த்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது.
ஈஹாங்கின் ட்ரோன்களை ஒருங்கிணை க்கவும், பருவநிலை எச்சரிக்கை களை பரிமாறவும், ஒரு மையக் கட்டுப்பாட்டு அறையையும் உருவாக்கி வருகிறது ஈஹாங்.
இந்த வெள்ளோட்டம் வெற்றி கண்டால், சீனாவின் பிற நகர்களிலும், வாடகை ட்ரோன்கள் மக்களை ஏற்றிச் செல்ல ஆரம்பிக்கும்.
Thanks for Your Comments