விருத்தாசலம் அருகே இளம் பெண் உடல் எரிந்த நிலையில் !

1 minute read
0
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வயலூர் ஏரிக்கு அருகாமையில் சுமார் 2 கிலோ மீட்டர் பரப்பளவில் காப்புக்காடு அமைந்துள்ளது. இக்காட்டின் உள்ளே இளம் வயதுடைய பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக விருத்தாச்சலம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.




இதனை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விருத்தாச்சலம் காவல் துணை கண்கானிப்பாளர் தீபா சத்யன் மற்றும் காவல் ஆய்வாளர் ஷாகுல் அமீது தலைமையில் காவல்துறை அதிகாரிகள், அப்பெண்ணின் உடலை பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அப்பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையிலும், மீதம் உள்ள உடல் அழுகிய நிலையில் கிடப்பதால், அப்பெண் இறந்து ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும் அக்காட்டின் அருகே தனியார் கல்லூரி இயங்கி வருவதால் இறந்த பெண் கல்லூரி மாணவியா? என்ற கோணத்திலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? 
அல்லது தற்கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, November 2025
Privacy and cookie settings