ஓடும் காரிலிருந்து கைக்குழந்தை தவறி சாலையில் விழுந்த அதிர்ச்சி கரமான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் மூணார் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தமிழ்நாட்டில் கோவில்களில் வழி பாடுகளை முடித்து விட்டு சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மூணார் அருகே சென்று கொண்டிருந்த போது, காரில் இருந்த ஒரு வயது கைக்குழந்தை தவறி கீழே விழுந்து விட்டது.
பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், அந்தக் குழந்தை தவழ்ந்தபடி சாலையின் மறு முனைக்குச் சென்றது. நல்வாய்ப்பாக அந்தச் சமயத்தில் வேறு வாகனங்கள் எதுவும் வராததால் அந்த குழந்தை உயிர் தப்பியது.
இந்தக் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி யிருந்தன. இதனைப் பார்த்த வனத்துறை யினர் அந்தப் பச்சிளம் குழந்தையை மீட்டு, சிறு காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே காரில் பயணித்தவர்கள் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டை அடைந்த பிறகுதான் குழந்தையைக் காண வில்லை எனத் தேடியுள்ளனர்.
என்ன நடந்தது எனத் தெரியாமல் அவர்கள் விழிபிதுங்கி நிற்க, காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப் பட்டு குழந்தை பெற்றோரிடம் சேர்க்கப் பட்டது.
ஆழ்ந்த நித்திரையில் இருந்ததால் காரிலிருந்து குழந்தை கீழே விழுந்தது தெரியாமல் வீட்டிற்கு வந்து விட்டதாக பெற்றோர் கூறி யுள்ளனர்.
Thanks for Your Comments