திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப் பட்டார். தற்போது ப. சிதம்பரம் திகார் சிறையில் இருக்கிறார்.
ஏற்கனவே சிபிஐ காவலில் இவர் 15 நாட்கள் விசாரிக்கப் பட்டார். தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சிறை
திகார் சிறையில் ப. சிதம்பரத்திற்கு பெரிதாக வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப் படவில்லை. அவர் தற்போது திகார் சிறையில் 7 -வது அறையில் உள்ளார்.
மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !
அவர் இரவு முழுக்க சரியாக உறங்க வில்லை. காலையில் சரியாக சாப்பிட வில்லை என்று கூறப்படு கிறது.
சந்திப்பு
இந்த நிலையில் ப. சிதம்பரத்தை சந்திக்க காங்கிரஸ் தலைவர்களின் குழு ஒன்று திகார் ஜெயிலுக்கு இன்று சென்றது.
காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், மாணிக்கம் தக்கூர், அவினாஷ் பாண்டே உள்ளிட்ட தலைவர்கள் அங்கே சென்றனர். அதே போல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலரும் சென்றனர்.
அனுமதி இல்லை
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ப. சிதம்பரத்தை சந்திக்க அனுமதிக்கப் படவில்லை. இவர்கள் அதிக பேர் கூட்டமாக வந்துள்ள தாக கூறி வெளியேற்றப் பட்டனர்.
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள்?
அதே போல் இவர்கள் யாரும் முறையாக சந்திக்க அனுமதி வாங்க வில்லை என்றும் கூறியுள்ளனர்.
நாளை தான்
இன்று ப. சிதம்பரத்தை சந்திக்க முடியாது. நேரம் முடிந்து விட்டது. நாளை அவரை சந்திக்க வேண்டும் என்றால் முறையாக அனுமதி வாங்கி கொண்டு வாருங்கள் என்று கட்சி தலைவர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
குடல் புழுவை வெங்காயத்தை வைத்து எப்படி வெளியேற்றலாம்?
ப. சிதம்பரத்தை இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் சந்திக் கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது .
Thanks for Your Comments