தாயாரை அடக்கம் செய்து திரும்பிய மகள் - மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி !

0
பிரித்தானியா வில் மார்பக புற்று நோயால் அவதிக்குள்ளாகி மரணமடைந்த தாயாரை அடக்கம் செய்து திரும்பிய இளம் பெண் ஒருவருக்கு, மருத்துவ மனையில் இருந்து கிடைத்த தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தாயாரை அடக்கம் செய்து திரும்பிய மகள்



பிரித்தானியா வில் குடியிருக்கும் 26 வயதான எம்மா மெக்காலே என்பவர், மார்பக புற்று நோய்க்கு தமது தாயாரை பறிக்கொடுத்து இரண்டு வார காலமே அப்போது ஆகியிருந்தது.

தாயார் மரணப் படுக்கையில் இருந்த அந்த இறுதி நாட்களில், எம்மாவின் வலது மார்பில் காணப்பட்ட கட்டி தொடர்பில் அவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப் பட்டார்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், எம்மாவின் தாயார் தமது 61-வது வயதில் மார்பக புற்றுநோயால் மரண மடைந்தார்.

அதே வேளையில் எம்மாவின் மார்பக கட்டி தொடர்பில் மருத்துவ அறிக்கையும் வெளியானது. 
தாயாரின் மறைவால் தமது வாழ்க்கை முற்றாக சிதைந்துள்ளது என வருந்திய எம்மாவுக்கு, அதன் தாக்கம் மேலும் அதிகரித்தது என்றே அவர் பின்னர் வெளிப்படுத்தி யிருந்தார்.

தாயாருக்கு ஏற்பட்டது போன்று தமக்கும் மார்பக புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்த போது, இனிமேலும் இழப்பதற்கு தம்மிடம் ஏதும் இல்லை என்றும், அடுத்து தாம் என்ன செய்ய வேண்டும் என்றே மருத்துவர்களிடம் வினவி யுள்ளார்.



அடுத்த 5 மாதங்கள் கடுமையான போராட்டக் களமாக மாறியுள்ளது எம்மாவின் வாழ்க்கை. தொடர்ந்து கீமோதெரபி எடுத்துக் கொண்ட எம்மா, புற்றுநோயில் இருந்து மீண்டு வர நம்பிக்கை கொண்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் ஒன்றாக சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொண்டனர். தாயாருடன் தாம் மேற்கொள்ளும் கடைசி பயணம் இதுவாகவே இருக்கும் என எம்மா முடிவு செய்திருந்தார்.
அதே ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி எம்மாவுக்கும் மார்பக புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எம்மாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை அகற்றும் சிகிச்சை முன்னெடுக்கப் பட்டது.

அதனால் ஏற்பட்ட வடுக்கள் தற்போதும் தமது உறுத்தலாக உள்ளது என்றாலும், அந்த வடுக்களால் தாம் பெருமைப் படுவதாக எம்மா தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings