பெருந்திரளாக மக்கள் கூடிய கூட்டத்தில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: எதிர்கட்சிகள் ஜம்மு காஷ்மீரை பிரிக்க முயலுகின்றனர்.
காங்கிரசும், காஷ்மீரில் வாரிசு அரசியல் வாதிகளும் இந்தியாவை இரண்டாக பிரிக்க முயற்சிக் கின்றனர். இந்தியாவை பிரிக்க அனுமதிக்க மாட்டோம். வாரிசு அரசியல் ஜனநாய கத்திற்கு ஆபத்தானது.
காஷ்மீரை காங்கிரஸ் பின்னோக்கி இழுத்து செல்ல முயற்சிக்கிறது. பயங்கர வாதிகளுடன் காங்கிரஸ் நிபந்தனை யற்ற பேச்சு நடத்த தயாராக இருக்கிறது.
இரண்டு பிரதமர்கள் வந்தால் ஒரே இந்தியாவாக இருக்க முடியாது. காங்கிரஸ் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.
வறுமையில் வாழ்வோர் குறித்து காங்கிரஸ் இப்போது பேசுகிறது. 60 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை காங்கிரஸ் குறை கூறுகிறது.
இது நமது படையினரை பழிப்பது போலாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பேச்சின் போது மோடி, மோடி என மக்கள் குரல் எழுப்பினர்.
Thanks for Your Comments