டெல்டாவிற்கு தண்ணீர் வரலை - குமுறும் விவசாயிகள் !

0
மேட்டூர் அணை திறக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்களைத் தாண்டி விட்டது ஆனாலும் பாசனத்திற் கான தண்ணீர் டெல்டா மாவட்டத்தின் மையப் பகுதிக்கு வந்து சேரவில்லை என விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள் விவசாயிகள்.
டெல்டாவிற்கு தண்ணீர் வரலை



மேட்டூர் அணை ஆகஸ்ட் 13ஆம் தேதி திறக்கப் பட்டது. டெல்டா மாவட்டங் களில் பாசனத்திற்காக ஆகஸ்ட் 17ஆம் தேதி கல்லணை திறக்கப் பட்டது. 
கடந்த காலங்களில் கல்லணை திறக்கப்பட்டு அதிக பட்சமாக ஒரு வாரத்திற்குள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விடும். ஆனால் கல்லணை திறக்கப்பட்டு மூன்று வாரங்களை கடந்து விட்டன. 

ஆனாலும் மையப் பகுதி களுக்கு கூட தண்ணீர் செல்லவில்லை. "மேட்டூர் அணை யிலிருந்து வினாடிக்கு 22,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப் பட்டால் தான் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையும். 

ஆனால் மேட்டூர் அணையி லிருந்து 15 நாட்களாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமே திறக்கப் படுவதே முதல் காரணம்," என்கிறார்கள் விவசாயிகள்.

கல்லணை கால்வாய், காவிரி, வெண்ணாறு, ஆகிய பிரதான ஆறுகளில் மொத்தமே 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
அதற்கு மேல் திறந்தால் இன்றைக்கு ஆறுகள் வாய்க்கால்கள், நீர்தேக்கிகள் இருக்கும் நிலமையில் உடைப்பு ஏற்பட்டு பெரும் சேதத்தை உண்டாக்கும், அதோடு ஆறுகளில் தூர்வாரும் பணிகளும், குடிமராமத்து பணிகளும் நடைபெறுகிறது. 

இதனால் தான் பிரதான இந்த மூன்று ஆறுகளிலும் தண்ணீர் குறைவாக விடப்படுகிறது." என்கிறார்கள் சில பொதுப்பணித் துறை அதிகாரிகள்.
குமுறும் விவசாயிகள்



குறைந்த அளவு தண்ணீர் காவிரியில் இருந்து வடவாற்றிலும், வெண்ணாறு, வெட்டாறு குடமுருட்டி யிலும் பிரித்து விடப்படுகிறது. 
இதன் காரணமாக கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல இடைப்பட்ட பகுதி களுக்கும் தண்ணீர் முழுமையாக சென்றடை யாத நிலையே தொடர்கிறது.

கல்லணை யிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலை விலுள்ள திருவையாறு அருகே உள்ள கபிஸ்தலத்தில் இருந்து பிரிந்து வரும் மண்ணி யாற்றில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இன்னும் திறக்க வில்லை. 

அங்குள்ள காவிரியிலேயே ஓரமாகத் தான் தண்ணீர் செல்கிறது. காவிரியின் மையப் பகுதியான திருப்பணந்தாள், மணல்மேடு, சோழபுரம், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி நீர் இன்னும் எட்ட வில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "ஆறுகள், குளங்களை தூர் வாருகிறோம் என்கிற பெயரில் மணலை கொள்ளை அடித்து வருகின்றனர். 

அதோடு விளை நிலங்களில் எடுக்கப்படும் மணல் ஆறுகளை அடைத்து கடத்தி வருவதால் ஆற்றில் தண்ணீர் திறக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளே கையூட்டு வாங்கிக் கொண்டு அஞ்சுகின்றனர்." என்கிறார்கள் விவசாயிகள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings