இளநீர் சீவ தெரியுமா? 32ஆயிரம் சம்பளம் - அதிர வைத்த விளம்பரம் !

1 minute read
0
நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்து வருகிறது. 
இளநீர் சீவ தெரியுமா?




இதனால் ஆட்டோ மொபைல் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடி க்கு தள்ளப் பட்டதோடு, வாகன உற்பத்தியை யும் நாளுக்கு நாள் குறைத்து வருகின்றனர். 
மேலும் ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகளும் உற்பத்தியை குறைத் துள்ளனர். அதன் தொடர்ச்சி யாக ஊழியர் களுக்கு விடுமுறையும் அளித்து வருகின்றனர். 
இதன் காரணமாக லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தி தாளில் வந்த விளம்பரம் ஒன்றில் படித்த இளைஞர் களை அதிர வைத்துள்ளது. 

அதில் சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் இளநீர் கடையில் இளநீர் சீவுவதற்கு ஆள் தேவை என்றும், அதற்கு சம்பளமாக அனுபவித் திற்கு ஏற்ப 22000 முதல் 32000 வரை சம்பளம் தரப்படும் என்று அறிவித்து இருந்தனர். 




இந்த செய்தி சமூக வலைத் தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த விளம்பரத்தில் 51/31, பீமன்னா முதல் தெரு, ஆழ்வார் பேட்டை, சென்னை, 

தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 9840824174 என்றும் கொடுத்துள்ளனர்.
இந்த விளம்பர தகவலை பற்றி கேட்க போன் செய்த போது "திங்கள் கிழமை நேர்ல வாங்க சார், அந்த விளம்பரம் உண்மை தான்" என்று கடை உரிமையாளர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 5, April 2025
Privacy and cookie settings