பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் மின்கட்டணம் செலுத்தாத தால் பாகிஸ்தான் பிரதமரின் தலைமைச் செயலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப் படும் நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான தகவலின் படி, கடந்த மாதத்திற்காக மின் கட்டணமான 41 லட்சத்தையும், இந்த மாதத்திற் காக மின் கட்டணமான 35 லட்சத்தையும், அந்நாட்டு பிரதமர் அலுவலகம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
இது குறித்து இம்ரான் கானின் அலுவலக த்திற்கு நோட்டீசும் அனுப்பப் பட்டுள்ளது. ஆனாலும் மின் கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப் படும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளிலேயே மின்சார பிரச்னை அதிகம் உள்ள நாடாக பாகிஸ்தான் உள்ளது.
Thanks for Your Comments