தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரியும் பலருக்கும் உடற் பயிற்சிக்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது.
ஒரு நாளில் பெரும் பகுதியை கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து செலவிடுவதால், உணவு செரிக்காமல் கொழுப்பாக சேர்கிறது. இது பின்னாளில் மிகப் பெரும் உடல் நலக் கேடுகளுக்கு வழிவகுக்கிறது.
சிலர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம் என்று மிகப் பெரிய டிரெட் மில் போன்ற வற்றை வாங்கி பின்னர் அதை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் நிலையும் நிலவுகிறது.
உடற் பயிற்சிக்கென குறிப்பிட்ட நேரம் இல்லாததே இதற்குக் காரணம். மாறாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓரளவு பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்திருக்க வந்துள்ளது தான் இந்த சைக்கிள்.
மடக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த கருவி இடத்தை அடைத்துக் கொள்ளாது. எடுத்துச் செல்வதும் எளிது.
கால்களுக்கு மட்டுமின்றி, கைகளுக்கும் இதில் பயிற்சி செய்ய முடிவது சிறப்பு. இதனால் கை, கால் தசைகள் ஆரோக்கிய மாக இருக்க வழி வகுக்கிறது.
ஒரு நாளைக்கு 15 நிமிடம் இதில் பயிற்சி செய்தாலே போதுமானது. உடலில் ரத்த ஓட்டம் சீராக இது வழிவகுக்கிறது. ஒரு நாளைக்கு உங்கள் உடலில் எத்தனை கலோரி எரிக்கப் பட்டது என்பதைக் காட்டும் மானிட்டரும் இதில் உள்ளது.
இதன் விலை சுமார் ரூ.1,659. மினி சைக்கிள் என்ற பெயரில் வந்துள்ள இந்த உடற்பயிற்சி கருவியை அமேசான் இணைய தளத்தில் வாங்கலாம்.
Thanks for Your Comments