சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரை யிறக்கும் பணி இன்று அதிகாலை மேற்கொள்ளப் பட்டது.
நிலவிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது லேண்டரி லிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டது.
எனவே லேண்டரை வெற்றிகரமாக தரை யிறக்கும் பணி நிறுத்தப் பட்டது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானி களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் அளித்தார்.
இந்த சமயத்தில் தோல்வியை எவ்வாறு கையாள வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளது பற்றி நினைவு கூர்வோம்.
அப்துல் கலாம், “கடந்த 1979-ஆம் ஆண்டு எஸ்எல்வி-3 ராக்கெட் மூலம் செயற்கைக் கோள் ஏவும் திட்டத்திற்கு தலைவராக நான் இருந்தேன். அப்போது இஸ்ரோ தலைவராக சதீஷ் தவான் இருந்தார்.
இந்தத் திட்டத்தின் முக்கியப் பணி செயற்கைக் கோளை விண்ணில் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்துவதாகும். செயற்கைக் கோளை விண்ணில் ஏவ தயாராக இருந்தோம்.
இறுதி கட்டத்தில் செயற்கைக் கோளை ஏவ வேண்டாம் என்று கணினி சமிக்ஞை வெளியிட்டது. எனினும் இந்த எச்சரிக்கையை பொருட் படுத்தாமல் செயற்கைக் கோளை ஏவினோம்.
ஆனால் இரண்டாவது கட்டத்தில் செயற்கைக் கோளில் கோளாறு ஏற்பட்டு அது வங்கக் கடலில் விழுந்தது. இந்த செயற்கைக் கோளை ஏவும் முடிவை நான் எடுத்தேன்.
ஆகவே இந்தத் தோல்விக்கு நானே முழு பொறுப்பு. இது தான் என்னுடைய முதல் பெரிய தோல்வி. அதுவரை நான் வெற்றியை கையாண் டிருக்கிறேன்.
ஆனால் முதல் முறையாக தோல்வியை சந்தித்தேன். அதை எவ்வாறு கையாள்வது என்று நினைத்தேன்?
அப்போதைய இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் செய்தி யாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அதில் அவர், “நாங்கள் இன்று தோல்வி அடைந்து விட்டோம்.
எங்களுடைய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் ஆகியவர் களுக்கு நான் முழு ஆதரவு அளிக்க உள்ளேன். அப்போது தான் அவர்கள் அடுத்த முறை வெற்றிப் பெறுவார்கள்” எனக் கூறினார்.
இதன் மூலம் இந்தத் தோல்விக்கான முழு பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். இதன் பின்னர் 1980 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் தேதி எஸ்எல்வி வெற்றிகரமாக ரோகிணி செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது.
இந்த முறை இஸ்ரோ தலைவர் சதீஷ் தவான் என்னை செய்தி யாளர்களை சந்திக்க சொன்னார். அன்று நான் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொண்டேன்.
அதாவது தோல்வி வரும் போது நிறுவனத்தின் தலைவர் அந்தத் தோல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதே சமயம் வெற்றி வரும் பட்சத்தில் அதனை வேலை செய்த குழுவிற்கு அளித்துவிட வேண்டும்.
இத்தகைய பெரிய விஷயத்தை நான் எந்தப் புத்தகத்தை படித்தும் கற்றுக் கொள்ள வில்லை. எனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டேன்” எனத் தெரிவித் துள்ளார்.
Thanks for Your Comments