தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா !

0
மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த தஹில் ரமானி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா




அவர் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்த நிலையில், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி பரிந்துரை செய்தது. 
அதே நேரத்தில் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அஜய்குமார் மிட்டலை, சென்னை உயர் நீதிமன்றத்து க்கு நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரை செய்தது.

தனது பணியிடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்திற்கு தஹில் ரமானி கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை நிராகரித்த கொலீஜியம், மேகாலயா விற்கு பணி யிடமாற்றம் செய்யும் பரிந்துரையை திரும்ப பெற முடியாது என்று திட்ட வட்டமாக தெரிவித்தது.

இதை யடுத்து, நீதிபதி தஹில் ரமானி பதவி விலக முடிவு செய்துள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பாக, அதிகாரப் பூர்வமான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி யுள்ளதாக பிடிஐ செய்தி வெளி யிட்டுள்ளது. 




ராஜினாமா கடிதத்தின் நகல் இந்திய தலைமை நீதிபதிக்கும் அனுப்பப் பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

இந்தியாவின் மிகப் பழமையான நீதி மன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் (தலைமை நீதிபதியை சேர்த்து) பணியிடங்கள் உள்ளன. 
தற்போது 60 நீதிபதிகள் பணியில் உள்ளனர். மீதமுள்ள பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால், 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மேகாலயா உயர் நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியை சேர்த்து மொத்தமே 3 நீதிபதிகள்தான் உள்ளனர். 

அதிலும், ஒரு பணியிடம் காலியாக உள்ளது. ஆயிரத்துக்கும் குறைவான வழக்குகளே அங்கு நிலுவையில் உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings