ஈரோடு, முனிசிபல் காலனியில் கார்த்தி (வயது 31) என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஈரோடு, வீரப்பன் சத்திரம், கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (37) என்பவர் வேலை பார்த்தார்.
பின்னர் ஏதோ ஒரு காரணத்திற் காக கார்த்திகேயன் வேலையில் இருந்து நின்று விட்டார். இந்நிலையில் நேற்று கார்த்திக் கடைக்கு கார்த்திகேயன் செல்போன் வாங்க வந்தார்.
செல்போன் வாங்குவது போல் சிறிது நேரம் போக்கு காட்டி திடீரென அவர் சென்று பிடிபட்டார். பின்னர் கார்த்தி பார்த்த போது கடையில் இருந்த 4 செல்போன்கள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கார்த்திகேயனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவர் கடையில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை பார்த்தார்.
அப்போது கார்த்திகேயன் கடையில் இருந்த நான்கு செல்போனை திருடிக் கொண்டு சென்றது பதிவாகி யிருந்தது.
இது குறித்து கார்த்தி ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
Thanks for Your Comments