தொடர்பை இழந்த லேண்டர் - விஞ்ஞானிகள் கூறிய நம்பிக்கை !

0
நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்த சந்திரயான்-1 திட்டத்தைத் தொடர்ந்து, 978 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சந்திரயான் - 2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. 



கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற மூன்று அமைப்பு களைக் கொண்டது.
கடந்த மாதம் 20-ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து கடந்த இரண்டாம் தேதி பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது.

நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டர், அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்ட மிடப்பட்டது. எரிபொருள் உள்பட 1471 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டரு க்குள் பிரக்யான் ரோவர் இருந்தது. 

இந்திய நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க ஆயத்தமானது. படிப்படியாக தரை யிறங்கும் கட்டளை பெங்களூரு மையத்தில் இருந்து அளிக்கப் பட்டது. 

அப்போது விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். இதனிடையே, விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதை காண, பிரதமர் மோடி, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்திருந்தார்.

15 நிமிட டெரர் எனப்படும் வேகம் திட்ட மிட்டபடி குறைந்து கொண்டே சென்ற நிலையில், நிலவின் மேல்பரப்பில் இருந்து சுமார் 2.1 கிலோ மீட்டர் தொலைவு வரை மிகச் சரியாக சிக்னல் களை அளித்து வந்த விக்ரம் லேண்டரின், தகவல் தொடர்பு துண்டானது. 
இந்த தருணத்தில் விஞ்ஞானிகள் முகம் சோகமாக மாறியது. நேரம் செல்ல செல்ல அசாதாரண சூழல் நிலவியது, பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன், அங்கு வந்திருந்த பிரதமரிடம் விளக்கம் அளித்தார். 

பின்னர் தகவல் தொடர்பு துண்டானதை அறிவித்தார். தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப் பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



இந்நிலையில், லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப் பட்டாலும், ஆர்பிட்டரை நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.

சந்திரயான்-2 விண்கலத்தின் செயல்பாடு 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவுக்கு அனுப்பப் பட்ட சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டது. 
5 சதவீத தோல்வியே என்றும் அதே நேரத்தில் ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கி கொண்டிருக் கின்றது என்றும் இஸ்ரோ அதிகாரிகள் கூறி யுள்ளனர்.

இஸ்ரோவுடன் தொடர்பில் இருக்கும் ஆர்பிட்டர் மட்டும் நிலவை தொடர்ந்து ஓராண்டுக்கு படம்பிடித்து அனுப்பும் என்றும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். 

தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரையும் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியும் என இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் லேண்டரின் நிலை பற்றி உறுதியான தகவல்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings