நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கடையம், தோரணமலை. புகழ்பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ள இப்பகுதி முண்டந்துறை புலிகள் காப்பகம் என்பதால் சிறுத்தை, மான், மிளா, கரடி,
செந்நாய் போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வாடிக்கை. இது தொடர்பாக வனத்துறை யினருக்குத் தகவல் தெரிவித்ததும் அவர்கள் வன விலங்கு களைக் காட்டுக்குள் அனுப்பி, மக்களின் அச்சத்தைப் போக்குவது வழக்கம்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை யொட்டியுள்ள கிராமங்களின் உள்ளே சிறுத்தைகள் நுழைந்து ஆடு, நாய்களைத் தூக்கிச் செல்வது வாடிக்கையா கிவிட்டது.
கடையம் அருகே பெத்தான் பிள்ளை குடியிருப்புப் பகுதிக்குள் சில மாதங்களு க்கு முன்பு சிறுத்தை ஒன்று புகுந்து ஆடு, நாய் போன்றவற்றை இழுத்துச் சென்றது.
அதனால் அந்தச் சிறுத்தையை வனத்துறை யினர் கூண்டு வைத்துப் பிடித்ததால் அந்தப் பகுதியில் சிறுத்தை களின் நடமாட்டம் குறைந்து விட்டது.
தோரண மலைப் பகுதியில் பால் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை ஒன்று படுத்துக் கிடந்ததால் பதற்ற மடைந்த அவர் வனத்துறை யினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் அங்கு வந்து பார்த்த போது சிறுத்தை அசையாமல் கிடந்துள்ளது. இதை யடுத்து, அதன் அருகில் சென்று பார்த்தனர். அங்கு இறந்த நிலையில் சிறுத்தை கிடந்துள்ளது.
அதன் கால் பகுதியில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருப்பதாக வனத்துறை யினர் சந்தேகிக் கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு, வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக வளர்க்கப்பட்ட வேட்டை நாய்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில், அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்ட த்தை அறிந்த யாராவது விஷம் வைத்திருக்கக் கூடுமோ என்கிற சந்தேகமும் வனத்துறைக்கு ஏற்பட்டிருக் கிறது.
கால்நடை மருத்துவர்கள் மூலம் சிறுத்தை உடற்கூறு ஆய்வு செய்யப் பட்டது. அதன் முடிவுகள் வந்த பின்னரே முழுத்தகவலும் தெரியவரும் என வனத்துறை யினர் தெரிவித்தனர்.
Thanks for Your Comments