சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-
லேண்டர் கருவி தகவல் தொடர்பை இழந்து விட்ட பிறகு அதன் கதி என்ன ஆனது என்று தெரிய வில்லை. அது மீண்டும் சிக்னல் தருமா? என்று உறுதியாக சொல்ல இயலாது.
என்றாலும் ஆர்பிட்டர் கருவி நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. அந்த கருவி மூலம் 95 சதவீத ஆய்வு பணிகளை மேற்கொள்ள முடியும்.
சந்திரயான்-2 திட்டத்தின் இலக்கில் 5 சதவீதம் தான் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சந்திரயான்-2 திட்டம் தோல்வி என்று சொல்ல முடியாது. சற்று பின்னடைவு ஏற்பட்டது அவ்வளவு தான்.
ஆர்பிட்டர் மூலம் தேவையான ஆய்வுகள் அனைத்தும் செய்யப்படும். நிலவின் அனைத்து பகுதியையும் ஆர்பிட்டரில் உள்ள அதிநவீன புகைப்பட கருவிகள் படம் பிடித்து அனுப்பும்.
அந்த படங்கள் அடிப்படை யில் ஆய்வு பணிகள் மேற்கொள்ள ப்படும்.
ஆர்பிட்டர் உதவியால் நிலவில் நிலவும் சூழல் கண்டு பிடிக்கப்படும். எனவே சந்திரயான்-2 திட்டத்தின் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அந்த விஞ்ஞானி கூறினார்.
Thanks for Your Comments