பொலீரோ வாகனத்தை தூக்கி நிறுத்தும் ராணுவப் பெண்கள் !

0
சமுதாயம் பெண்களை பலவீனமானவர் களாகவே பார்த்து வருகிறது. மருத்துவம், கலை, இலக்கியம், அறிவியல் இன்னும் என்னென்னவோ துறைககளில் சாதித்தி ருந்தும் உடல் பலத்தை பொறுத்து பலவீன மானவர்க ளாகவே பெண்கள் பார்க்கப் படுகின்றனர்.
பொலீரோ வாகனத்தை தூக்கி நிறுத்தும் பெண்கள்




இது போன்று யோசிப்பவர் களை, தங்கள் பார்வையை மாற்றிக் கொள்ள வைக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. பொலீரோ வாகனத்தை ஆண்கள் உதவியின்றி தூக்கி நிறுத்தும் சூப்பர் ராணுவப் பெண்கள்... பாருங்க அத...

நாகலாந்து சட்டப் பேரவை உறுப்பினரான மஹோன்லுமோ கிகோன், ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 
தண்ணீர் செல்லும் கால்வாய் ஒன்றினுள் சரிந்து கிடக்கும் பொலீரோ வாகனத்தை இராணுவத்தின் பெண் வீராங்கனைகள், ஆண்களின் உதவியின்றி தூக்கி நிறுத்தும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகி யுள்ளது.

அந்த வீடியோவுடன், "பக்கவாட்டு கால்வாயில் விழுந்த மஹிந்திரா பொலீரோவை தூக்கி யெடுக்கும் நாகா பெண்கள் படை. அநேகர் பார்க்க வேண்டிய பழைய வீடியோ" என்று பதிவிட்டுள்ளார் மஹோன்லுமோ கிகோன்.




மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, கிரென் ரிஜ்ஜூ, அமித் ஷா மற்றும் மன்ஜோ நந்தி உள்ளிட்ட பலரை தமது ட்விட்டர் பதிவுடம் 'டேக்' செய்துள்ளார் கிகோன். 

இந்தப் பதிவு மூன்றா யிரத்துக்கும் அதிகமான முறை ரீட்விட் செய்யப் பட்டுள்ளது. பல பதிவர்கள் இதற்கு பின்னூட்டமிட்டு வருகின்றனர். ஒரு பதிவர், "அவள் ஒரு பெண். 
அவளால் எதுவும் செய்ய இயலும்" என்றும் இன்னொருவர், "பெண்களுக்கு அதிக வலிமை" என்றும், "வாய் பிறந்து வணக்கம் (சல்யூட்) வைப்போம்" என்றும் பின்னூட்ட மிட்டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings