பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான, புதிய அரசு அமைந்து வரும் 7ஆம் தேதியுடன் நூறாவது நாள் நிறைவடை வதை ஒட்டி, பிரம்மாண்ட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு பாஜகவும், மத்திய அரசும் ஏற்பாடு செய்துள்ளன.
இவ்வாண்டு நடைபெற்ற 17-வது லோக்சபாத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை யுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. மறுபடியும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.
மோடி அரசு அமைந்து, செப்டம்பர் 7ம் தேதியுடன், 100 நாட்கள் நிறைவடைகிறது. இதை மிக பிரமாண்டமாக கொண்டாட, பாஜகவும், மத்திய அரசும் திட்டமிட்டுள்ளன.
இதையொட்டி, மூத்த அமைச்சர்கள், வரும் 7ம் தேதி பத்திரிக்கை களுக்கு எடிட்டோரியல் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். இந்த எடிட்டோரியல் மறுநாள் முன்னணி பத்திரிகை களில் வெளியாக உள்ளன.
செப்டம்பர் 8ம் தேதி மத்திய அரசின் சாதனைகள் தொடர்பாக பிரஸ் மீட் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர்களும், பாஜக மூத்த தலைவர்களும் பல்வேறு நகரங்களில் அன்று செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்துவார்கள்.
11ஆம் தேதி முதல், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு, 'மக்கள் சேவை வாரம்' கடைபிடிக்கப்பட உள்ளது. மோடியின் பிறந்த நாள் செப்டம்பர் 17ம் தேதியாகும்.
பொருளாதார சரிவு விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், 100 நாள் கொண்டாட்ட, விழாவை பிரமாண்ட மாக நடத்தி, மக்கள் மற்றும் தொண்டர்களின் கவனத்தை அதை நோக்கிக் கொண்டு செல்லலாம் என்பது பாஜகவில் உள்ள சில தலைவர்களின் திட்டமாக உள்ளதாம்.
Thanks for Your Comments