மோடி அரசின் திட்டம் - பைக்கை கொளுத்திய இளைஞர் !

0
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதால், போலீசார் எடுத்த அதிரடியான நடவடிக்கை யால் இளைஞர் ஒருவர் தனது ஸ்பிளென்டர் பைக்கை நடுரோட்டில் வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பைக்கை கொளுத்திய இளைஞர்



வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், அதற்கு இணையாக போக்குவரத்து விதி மீறல்களும் கணிசமாக உயர்ந்து வருகின்றன. 

இதனால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, நாள் தோறும் உயிரிழப்பு களும், காயமடை வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனை குறைப்பதற் கான முயற்சிகளும், திட்டங்களுக்கும் போதிய பலன் இல்லை. இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறல் களை கட்டுப் படுத்துவதற் காக அபாரதத் தொகையை கணிசமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, போக்குவரத்து விதிமீறுவோருக் கான அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப் பட்டது. இந்த புதிய அபாரதத் தொகை வசூலிப்பு நடைமுறை கடந்த 1ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல் களில் ஈடுபடுவோரு க்கு புதிய விதிகளின்படி கணிசமான அபாரதத் தொகையை போக்குவரத்து போலீசார் விதித்து வருகின்றனர். 

இது கடும் களேபரத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய அபாரத விதி முறையால் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் குறித்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்து வதாக அமைந்துள்ளது.

சில தினங்களு க்கு முன் டெல்லியை சேர்ந்த தினேஷ் மதன் என்ற இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் குர்கான் நகருக்கு வந்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால், போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில், அவரிடம் ஸ்கூட்டருக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே, ஒட்டு மொத்தமாக கணக்குப் போட்டு ரூ.23,000 அபாரதத்தை விதித்தனர். இதனால், தினேஷ் மதன் கடும் அதிர்ச்சி யடைந்தார். 

ஏனெனில், ஸ்கூட்டரின் மதிப்பே ரூ.15,000 தாண்டாது. ஆனால், அதனை விற்றால் கூட அபாரதத்தை கட்ட முடியாத நிலை இருப்பதாக அப்பாவியாக தனது நிலையை தெரிவித்தார்.

ஆனால், டெல்லியில் நடந்த சம்பவம் போலீசாருக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தெற்கு டெல்லியில் சிரக் நகர், திரிவேணி காம்ப்ளெக்ஸ் பகுதியில் போலீசார் நேற்று வாகன தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, பைக்கில் வந்த இளைஞரை போலீசார் மடக்கினர். அந்த இளைஞர் குடிபோதை யில் இருந்தது தெரிய வந்தது. விசாரணை யில் அவரது பெயர் ராகேஷ் என்றும், சர்வோதயா என்க்ளேவ் குடியிருப்பை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. 

இதை யடுத்து, குடிபோதை யில் வாகனத்தை இயக்கிய தற்காக அவருக்கு ரூ.25,000 அபாரதம் விதித்து செல்லான் கொடுத்தனர். அத்துடன் அவரது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கையும் பறிமுதல் செய்தனர். 
மோடி அரசின் திட்டம்



போலீசாரின் அதிரடி நடவடிக்கையை கண்டு, கடும் ஆத்திர மடைந்த ராகேஷ்,பெட்ரோல் டேங்க்கில் தீ வைத்து அங்கேயே தனது பைக்கை வைத்து கொளுத்தி விட்டார். தீ பற்றிய பைக் சிறிது நேரத்தில் கருகி சாம்பலானது.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாருக்கே இது அதிர்ச்சியை கொடுத்தது. பைக்கை கொளுத்திய ராகேஷ் மீது வழக்குப் பதிவு அவரை கைது செய்தனர். 

இந்த சம்பவம் அ்நத வழியாக சென்றவர் களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மோடி அரசின் இது போன்ற சில நல்ல திட்டங்கள் தொடர்ந்து இது போன்ற அதிர்ச்சியான சம்பவங் களையும், விளைவு களையும் ஏற்படுத்தி வருகிறது. 

போக்குவரத்து விதிமீறலில், குறிப்பிடும் படியாக, குடிபோதை யில் வாகனங் களை இயக்குவோரு க்கு அதிக அபராதம் விதிக்கப் படுவதுடன், கடுமையான அபராதம் விதிக்கப் படுகிறது.

இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும், இதன் மூலமாக விபத்துக்கள் குறைந்தால் சரி என்ற மனநிலையில் தான் நாம் இருக்கிறோம். 

புதிய போக்கு வரத்து விதிகளால் இன்னும் இது போன்ற என்னென்ன சம்பவங்கள் நடக்கப் போகிறதோ என்ற அச்சமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. புதிய போக்குவரத்து அபாரதத் தொகையானது மிக கணிசமானது தான். 
ஆனால், அது நிச்சயம் போக்குவரத்து விதிமீறல் களை குறைக்க வழி செய்யும். மேலே குறிப்பிட்டவர் களை போன்று நீங்கள் போக்குவரத்து போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஒரே உபாயம்தான் உள்ளது. 

அது போக்குவரத்து விதமீறல்களை தவிர்ப்பது தான் புத்திசாலித் தனமாக இருக்கும். உங்களை போல சாலையில் வரும் பிறருக்கும் நலம் பயக்கும். 

போக்குவரத்து விதி மீறல்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப் படுகிறது என்பதை தெரிந்து கொண்டீர்கள் என்றால், நிச்சயம் விதிமீறல் களில் ஈடுபட மாட்டீர்கள் என நம்பலாம். அதையும் தொடர்ந்து வழங்கி யுள்ளோம்.

வாகன ஓட்டிகள் பொதுவான குற்றங்களில் ஈடுபட்டால், செக்ஸன் 177 -ன்படி முன்பு 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 
இனி 500 ரூபாய் அபராதம்



அதே சமயம் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமை என்ற குற்றத்திற்கு, செக்ஸன் 179ன் கீழ் பழைய அபராத தொகை 500 ரூபாய் மட்டும் தான். ஆனால் புதிய அபராத தொகை 2,000 ரூபாய்.

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர் களுக்கு முன்பு செக்ஸன் 181ன் கீழ் 500 ரூபாய் மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், 5,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய திருக்கும். 

அதே நேரத்தில் வாகனங்களை அதிவேகமாக இயக்குபவர் களுக்கு செக்ஸன் 183ன்படி முன்பு 400 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்க ப்பட்டு வந்தது.

ஆனால் இனி வாகனங்களை அதிவேகமாக இயக்கினால், இலகுரக மோட்டார் வாகனம் என்றால் 1,000 ரூபாயும், மீடியம் பாசஞ்சர் வாகனம் என்றால் 2,000 ரூபாயும் அபராதம் கட்ட வேண்டிய திருக்கும். 

அதே நேரத்தில் குடிபோதை யில் வாகனம் ஓட்டுபவர்க ளுக்கான அபராதம் முன்பு செக்ஸன் 185ன் கீழ் 2,000 ரூபாயாக மட்டுமே இருந்தது. தற்போது இது அதிரடியாக 10,000 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.

பொது சாலைகளில் ரேஸிங்கில் ஈடுபடுபவர் களுக்கான பழைய அபராத தொகை 500 ரூபாய் மட்டும்தான் (செக்ஸன் 189). 
ஆனால் புதிய அபராத தொகை 5,000 ரூபாய். பெர்மிட் இல்லாத வாகனங் களுக்கு முன்பு செக்ஸன் 192ஏ-ன் கீழ் 5,000 ரூபாய் வரை மட்டுமே அதிகாரிகளால் அபராதம் விதிக்க முடியும். 

ஆனால் இந்த குற்றத்திற் கான புதிய அபராத தொகை 10,000 ரூபாய் வரை உயர்த்தப் பட்டுள்ளது. 
அபராத தொகை



இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம் ஓவர்லோடு. வாகனங்களில் ஓவர்லோடு ஏற்றி செல்பவர் களுக்கு முன்பு செக்ஸன் 194ன் படி வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. 

இது தவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் ஓவர்லோடிங் குற்றத்திற் கான புதிய அபராத தொகை 20,000 ரூபாய் என ஒரே அடியாக உயர்த்தப் பட்டுள்ளது. 

இது தவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் தனியாக 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம் சீட் பெல்ட் அணியாதவர் களுக்கு முன்பு செக்ஸன் 194பி-ன் படி 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப் பட்டது. 

இது தற்போது 1,000 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. முன்பு இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர் களுக்கு செக்ஸன் 196ன் கீழ் 1,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. 
இது தற்போது 2,000 ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்கள் வந்தால் வழி விடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இருந்தால் நிச்சயமாக நல்லது. தொடர்ந்து கடை பிடியுங்கள்.

ஒரு வேளை அப்படிப்பட்ட ஒரு நல்ல பழக்கம் உங்களுக்கு இல்லாவிட்டால், இனியாவது பழக்கப் படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் எமர்ஜென்ஸி வாகனங் களுக்கு வழி விடா விட்டால், செக்ஸன் 194 இ-ன் படி உங்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 

சரி, தண்டனை எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இது அதிகாரிகளு க்கும், போலீசாரு க்கும் பொருந்தும். 
வாகன ஓட்டிகள்



ஆம், இந்த விதி முறைகளை அமல்படுத்த கூடிய அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். 

இதில், விசேஷம் என்ன வென்றால், அந்த அதிகாரிகள் என்ன தவறு செய்தாலும், அந்த குற்றத்திற்கு சாதாரண வாகன ஓட்டிகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப் படுகிறதோ, அதை விட இரு மடங்கு அதிக அபராதம் அதிகாரி களுக்கு விதிக்கப்படும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையில் பாராட்டுக் குரியது. ஏனெனில் கரிசணம் காட்டி கொண்டே இருப்பதால் தான் வாகன ஓட்டிகள் தொடர்ந்து தவறு செய்து கொண்டே உள்ளனர். 
இனி ஒரு முறை அபராதம் செலுத்தி விட்டால், அடுத்த முறை அந்த தவறை செய்ய வாகன ஓட்டிகள் சிந்திப்பார்கள். 

இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படி யாக குறையும் என எதிர் பார்க்கப் படுகிறது. இதை படித்த பிறகாவது போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவதை கை விடுவீர்கள் என்று நம்புகிறோம். 

நம் தவறை திருத்திக் கொண்டாலே, போலீசாரிடம் வாக்குவாதம் உள்ளிட்ட வற்றையும், உங்களது பொன்னான நேரம் மற்றும் உடைமை களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings