இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு !

0
இந்தியாவின், 'சந்திரயான் - 2' திட்டம் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில், 'இஸ்ரோ' எனப்படும் 
இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு




இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்' என, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'நாசா' கூறியுள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 2 திட்டத்தை, இஸ்ரோ செயல் படுத்தியது.  'விக்ரம்' என பெயரிடப் பட்டுள்ள, 'லேண்டர்' எனப்படும், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்யும் சாதனத் துடனான தொடர்பு துண்டிக்கப் பட்டது. 

இந்த நிலையில், இது குறித்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ள தாவது: விண்வெளி ஆய்வு என்பது மிகவும் கடினமானது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்யும் இஸ்ரோவின், சந்திரயான் - 2 திட்டம் மிகவும் பாராட்டக் கூடியது. உங்களுடைய இந்த முயற்சி, மிகவும் ஊக்கம் அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. 
சூரிய குடும்பத்தை ஆய்வு செய்வதில், இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். இவ்வாறு, அந்த செய்தி யில் கூறப் பட்டுள்ளது.

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர், ஜெர்ரி லினகர் கூறியுள்ள தாவது: சந்திரயான் - 2 திட்டம், மிகவும் தைரியமான முடிவு. 




விக்ரம் லேண்டர் சாதனத் துடனான தொடர்பு துண்டிக்கப் பட்டதில் இருந்து, இந்தியா நிறைய கற்றுக் கொண்டிருக்கும். இது, அடுத்து வரும் திட்டங்களுக்கு மிகவும் உதவும். 

எனவே, திட்டம் தோல்வியடைந்து விட்டதாக ஏமாற்றம் அடைய வேண்டாம். இந்தியா மேற்கொண்ட முயற்சி, மிகவும் கடினமானது. இவ்வாறு, அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings