இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்கள் அமைப்பது தொடர்பாகவும், கூடங்குளம் அணு உலை தொடர்பாகவும் நேற்று ரஷ்யாவில் ஆலோசனை நடத்தப் பட்டது.
பிரதமர் மோடி தற்போது ரஷ்யா சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ளார். இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அவர் ரஷ்யா சென்று இருக்கிறார். இன்றோடு அவர் பயணம் முடிவடைகிறது.
நேற்று காலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி சந்தித்தார். இதில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையில் எரிசக்தி துறையில் புதிய ஒப்பந்தங்கள் போடப் பட்டது.
அணு எரிபொருள்
இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் நடத்திய கூட்டத்தில் இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்கள் அமைப்பது தொடர்பாக விவாதிக்கப் பட்டது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்களை ரஷ்யாவுடன் இணைந்து அமைக்க ஆலோசிக்க பட்டுள்ளது.
ரஷ்யாவின் முக்கிய அமைச்சரவை உறுப்பினர்கள் மட்டும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
எண்ணெய் குழாய்கள்
ரஷ்ய அணுசக்தி துறையின் துணை தலைவர் லெக் கிரிகோரியாவ் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டம் வேகமாக வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த திட்டத்தின் அடிப்படையில் இந்திய நிறுவனங் களுடன் சேர்ந்து இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்களை ரஷ்யா அமைக்க வேண்டும். இது இரண்டு நாட்டிற்கும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார்.
யார் கொடுத்த அடியா
அவர் அப்போது கொடுத்த ஐடியாவில் அடிப்படையில் நேற்று இந்த ஆலோசனை நடந்தது. அதன்படி, அணு எரிபொருள் குழாய்களை இந்தியா வில் அமைக்க இதில் ஆலோசிக்கப் பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்ப அணு உலைகளுக்கு அருகில் இந்த குழாய்கள் அமைக்கப் படும். இதில் முதற் கட்டமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
கூடங்குளம்
அதன்படி இந்த அணு எரிபொருள் குழாய்கள் கூடங்குளத்தில் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
இன்னும் சில நாட்களில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் இயங்க உள்ளது. அதனபின் 5 மற்றும் 6வது அணு உலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்படும்.
எவ்வளவு
எல்லாம் 1000 மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்கும் அளவிற்கு உருவாக்கப் படும். இந்தியா முழுக்க மொத்தம் 12 அணு உலைகள் ரஷ்யா மூலம் இப்படி அமைக்கப்படும்.
அனைத்தும் 1000 மெகா வாட் மின்சாரத்தை உருவாக்கும். இந்த பகுதிகளில் எல்லாம் அணு எரிபொருள் குழாய்கள் அமைக்கப்படும்.
இதை ரஷ்யா நேரடியாக செய்யாமல் இந்திய நிறுவனங் களுடன் இணைந்து செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments