ஒடிசா மாநிலத்தில் அரசு உயர் பதவிகளில் உள்ளவர்கள் லஞ்சம், ஊழல் போன்ற வற்றில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டால் அவர்களைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிப்பது தான் இதுவரை அதிகபட்ச தண்டனையாக இருந்தது.
இந்நிலையில் இது குறித்து ஒடிசா அரசின் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றதை யடுத்து இன்று (நேற்று) ஒரு நாளில் மட்டும் 16 அரசு அதிகாரிகளை பணியி லிருந்து முழுவதுமாக விடுவித்து பணி நீக்கம் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது.
ஒடிசா அரசு கடந்த ஒரு மாதத்தில் இது போன்ற பணிநீக்க உத்தரவு களை 37 பேருக்கு வழங்கி யுள்ளது.
பல்வேறு ஊழல் வழக்குகளில் நீதி மன்றத்தால் தண்டிக்கப் பட்ட பின்னர் அரசு ஊழியர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
4 பொறியாளர்கள், 5 தலைமை ஆசிரியர்கள், 2 வருவாய் ஆய்வாளர்கள், 1 மருந்தாளர், அமீன், பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மற்றும் 2 எழுத்தர்கள் உட்பட 16 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டனர்.
கடந்த ஒரு மாதத்தில் இது போன்ற 3-வது நடவடிக்கை ஆகும். இதில் மொத்தம் 37 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு 6 ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தப் பட்டுள்ளது.
அரசுப் பணிகளில் இருப்போர் லஞ்சம் உள்ளிட்ட முறைகேடான காரியங் களில் ஈடுபடுவதை முதல்வர் நவீன் பட்நாயக் கடுமையாக எதிர்க்கிறார்.
இனியும் லஞ்சம் பெறலாம் என நினைக்கும் அரசு பணியாளர் களுக்கு இத்தண்டனை ஒரு முன்னுதாரண மாக அமையும் இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Thanks for Your Comments