ஆர்வ மிகுதியால் ஏற்படும் பதற்றம் - பகீர் தகவல் !

0
உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஒவைஷ். டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், 
ஆர்வ மிகுதியால் ஏற்படும் பதற்றம்



கடந்த ஆக.26-ந் தேதி வழக்கம் போல பணி முடித்து இரவு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, லல்லன் மற்றும் அயூப் ஆகிய இரு விற்பனை யாளர்களுடன் ‘மொபைல் ஹெட் போன்’ அதிக விலைக்கு விற்கப் படுவதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரண்டு விற்பனை யாளர்களும் முகமது ஓவைஷை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், டெல்லி பிரதேச இளைஞர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் முகமது ஓவைஷ் தாக்கப் பட்டதன் காணொலி என குறிப்பிடப்பட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தனர். 

அந்த வீடியோ வின் தொடக்கத்தில் "நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக ஒரு இளைஞன் உயிரை இழந்திருக் கிறான்" என குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்த வீடியோவின் உண்மை தன்மையை அறிய, அதனை ஆய்வு செய்ததில், அது போலி என கண்டறியப் பட்டுள்ளது. அந்த வீடியோ உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் எடுக்கப் பட்டது என்பது தெரிய வந்துள்ளது. 

மீரட்டில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை அப்பகுதி மக்கள் அடித்துள்ளனர். அதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதிவிட் டுள்ளனர். 



குறிப்பாக டெல்லியில் ஆசிரியர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் இரவில் அரங்கேறியது. ஆனால் சமூக வலை தளத்தில் பரவும் வீடியோவோ பகலில் எடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இது போலி என தெரிய வந்துள்ளது.

இது போன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகும் வீடியோக் களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. 
ஒரு வேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.

போலி செய்திகளால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறி யிருக்கிறது. 

சமூக வலைத் தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings