புதிய பைக்கை ஓட்டி வந்த இளைஞருக்கு போலீஸார் ரூ. 23,500-க்கான அபராதத் தொகையை வழங்கி யுள்ளனர். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
நாட்டில் அதிகரித்தும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை யால் பல்வேறு பிரச்னைகள் புதிது புதிதாக உருவாகிய வண்ணம் உள்ளன.
அதில், மிகப் பெரிய பிரச்னையாக விபத்துகளே இருக்கின்றன. இது, வாகனங்களின் எண்ணிக்கை க்கு ஏற்பவாறு நாள்தோறும் அதிகரித்தவாறு இருக்கின்றது.
அதே சமயம், விபத்துகள் அதிகரிப்ப தற்கு வாகன ஓட்டிகள் முறையாக போக்கு வரத்து விதிகளை கடை பிடிக்காமல் செல்வதே முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஆகையால், போக்குவரத்து விதிமீறல்கள் என்ற ஓர் செயலே இல்லாத இந்தியாவை உருவாக்கும் விதமாக மத்திய அரசு புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அண்மையில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
இது, கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 1) முதல் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டதை செயல் படுத்துவதில் ஒரு சில மாநிலங்கள் சிக்கலைச் சந்தித்துள்ளன.
அந்த வகையில், குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் இதுகுறித்த வரைவு அறிக்கையை தயார் செய்து வருகின்றன.
அதேசமயம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் புதிய உயர்த்தப் பட்ட அபராத திட்டத்தை மாநிலத்தில் அமலுக்குக் கொண்டு வர மாட்டோம் என திட்ட வட்டமாக அறிவித்திருப்ப தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இதற்கு பிள்ளையார் சுழியிட்ட மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கின்றது. முதன் முதலில் இத்திட்டத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தி ருந்தார்.
இதைத் தொடர்ந்து, மற்ற சில மாநிலங்கள் இதைப் பின்தொடர ஆரம்பித் துள்ளன. இருப்பினும், சில மாநிலங்கள் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அமல் படுத்துவதற் கான நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் புதிதாக வாங்கிய பைக்கை ஓட்டிச் சென்ற ஓர் இளைஞரு க்கு, அம்மாநில போக்குவரத்து போலீஸார் ரூ. 23,500-க்கான அபராதத் தொகையை, புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி வழங்கி யுள்ளனர்.
ஹரியானா மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் சோனு. இவர், நேற்று (வியாழக் கிழமை) தலைநகர் டெல்லியில் உள்ள ஹிசார்-சிர்சா சாலையில், அண்மையில் வாங்கிய புதிய பைக்கில் சென்றுள்ளார்.
இந்த பைக்கில், இன்னும் பதிவெண் ஒட்டப்பட வில்லை என கூறப்படு கின்றது. ஆகையால், இந்த பைக்கை மடக்கிய போலீஸார், ஏன் பைக்கில் பதிவெண் ஒட்ட வில்லை என கேள்வி யெழுப்பி யுள்ளனர்.
அதற்கு அவர், தான் சமீபத்தில் தான் பைக்கை வாங்கிய தாகவும், இதனை இன்னும் பதவி செய்ய வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, வாகனத்தில் முறையாக சான்று இல்லாத காரணத்தாலும், பதிவெண் இல்லாமல் பைக்கை இயக்கிய குற்றத்திற் காகவும் அவருக்கு ரூ. 23,500-க்கான அபராதத்திற் கான செல்லாண் வழங்கப் பட்டது.
இது போன்று, அதிக அபராதம் கொண்ட செல்லாணை டெல்லி போலீஸார் வழங்குவது முதல் முறையல்ல.
முன்னதாக இதே போல போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட தினேஷ் மதன் என்ற இளைஞருக்கு ரூ. 23 ஆயிரத்திற் கான அபராதச் செல்லாண் வழங்கப் பட்டது.
அவருக்கு கொடுக்கப்பட்ட செலாண் விவரம் பின்வருமாறு:
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக்கை இயக்கியது.
பதிவு சான்று இல்லாமல் இயக்கியது.
இன்சூரன்ஸ் காலாவதி.
காற்று மாசு.
தலைக் கவசம் அணியாமல் பைக்கை இயக்கியது. உள்ளிட்ட பல விதி மீறல்களின் கீழ் அவருக்கு அபராதம் வழங்கப் பட்டது.
ஆகையால், தனக்கு வழங்கப்பட்ட அபராதம் தன்னுடைய வாகனத்தை விட அதிகமாக இருப்பதாக கூறி, இருசக்கர வாகனத்தை போலீஸாரிடமே அவர் ஒப்பைடத்து விட்டதாக கூறப்படு கின்றது.
இதே போன்று, தனது பைக்கை விடை அதிகள விலான அபராதத் தொகையை வழங்கியதாக, போதையில் ஆசாமி ஒருவர், அவரது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை போலீஸார் கண்கள் முன்பே எரித்து நாசமாக்கினார்.
இச்சம்பவமும் டெல்லியில் தான் அரங்கேறி யுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்த இந்த திட்டம்,
நாடாளு மன்றத்தின் இரு அவைகளி லும் கடும் எதிர்ப்பு களுக்கு மத்தியில் அண்மையில் ஒப்புதல் பெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
"எங்களின் நோக்கம் அதிக தொகையை கட்டணமாக வசூலிப்பது இல்லை. போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வைப்பதே" என அவர் தெரிவித் துள்ளார்.
மத்திய அரசின் இந்த அதிரடி திட்டம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இதனால், விரைவில் பலர் தங்களது சொந்த வாகனங்களை விற்று விட்டு, பொது பயன் பாட்டில் உள்ள வாகனங்களை நோக்கி மக்கள் நகரலாம் என எதிர் பார்க்கப் படுகின்றது.
பொது பயன்பாட்டு வாகனங்களை நோக்கி நகர்ந்தாலும், அதற்கும் ஆப்பு வைக்கும் வகையில் போலீஸார் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், புதிய பைக்கைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் என்றும் பாராமல் கடுமையான அபராதத்தை போலீஸார் வழங்கி யுள்ளனர். இதனால், மன உளைச் சலைடந்திருக்கும் அவரின் கண்ணீர் கதையை கீழே தொடர்ந்து காணலாம்.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து போலீஸார் அதி தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஆக்ரியா விஹார் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அனைத்து வாகனங் களையும் மடக்கி ஆவணங்களைப் பரிசோனை செய்தனர்.
அதே போல, அவ்வழியே வந்த ஆட்டோ ஒன்றையும் அவர்கள் மடக்கி ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், அந்த ஆட்டோ பல முறை கேடுகளுடன் இயக்குவது தெரிய வந்தது. முக்கியமாக, ஆட்டோவை இயக்கி வந்த ஹரி பந்து கன்ஹர் என்பவர் மது போதையில் இருந்துள்ளார்.
இதற்காக ரூ. 10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அந்த ஆட்டோ காற்று/ஒலி ஆகிய வற்றை மாசை ஏற்படுத்தி யதற்காக ரூ. 10 ஆயிரமும், பெர்மிட் இல்லாமல் இயக்கியதற்கு ரூ. 10 ஆயிரமும்,
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கி யதற்காக ரூ. 5 ஆயிரமும், இன்சூரன்ஸ் இல்லாதற்கு ரூ. 2 ஆயிரமும் மற்றும் பொதுவாக விதிமீறலு க்கு ரூ. 500 என ஒட்டுமொத்தமாக ரூ.47,500 அபராதச் செல்லாண் வழங்கப்பட்டது.
இந்த அபராதத்தை ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக சம்பவ இடத்திலேயே செலுத்த வில்லை. மாறாக, அவரை சந்திரசேகர் பரிசோதனை மையத்தில் கட்டணத்தை செலுத்துமாறு அறிவித்தப் பட்டுள்ளது.
இது குறித்து ஆட்டோ உரிமையாளர் கூறியதாவது, "நான் இந்த ஆட்டோவை கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் வாங்கி யிருந்தேன்.
ஆகையால், இன்னும் அதன் முந்தைய உரிமை யாளரின் பெயரில் இருந்து என் பெயருக்கு மாற்றவில்லை. ஆட்டோவிற்கு கட்டணமாக ரூ. 26,000 மட்டுமே கொடுத்துள்ளேன்.....
.ஆனால், போலீஸார் வழங்கி யுள்ள அபராதத் தொகையே இரு மடங்கு அதிமாக உள்ளது. எனது ஒரு நாள் கூலியே என் குடம்ப தேவைக்கு போதுமானதாக இல்லை.
இதில், இத்தகைய பெரிய தொகை எனக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது" என்றார். தற்போது விதிக்கப்பட்டும் புதிய அபராத் தொகை, பெரும்பாலும் வாகனத்தின் விலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் வகையில் இருக்கின்றது.
ஆகையால், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இனி வாகனத்தையே இயக்கக் கூடாது என்ற அளவிற்கு உச்சகட்ட மன உளைச்சலுக்கு சென்றுள்ளனர்.
இதன் எதிரொலி யாகவே டெல்லியில், இளைஞர் அவரது சொந்த வாகனத்தைய எரித்து, எதிர்ப்பு காட்டி யுள்ளார். போலீஸாரின் இந்த கெடுபிடியில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது.
அது, முறையாக போக்குவரத்து விதிமுறை களை கடைபிடிப்ப தாகவும். இல்லை யெனில், நமது வாகனத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகரிக்கப் பட்ட அபராதத் தொகையைச் செலுத்தும் சூழலுக்குத் தள்ளப் படுவோம்.
அதே சமயம், அபராதம் கட்டப்படாத வாகனங் களை போலீஸார் பறிமுதல் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால், வரும் காலங்களில் இது போன்ற என்ன வெல்லாம் புதிய பிரச்னைகள் நாட்டில் வருமோ என்ற அச்சம் கலந்த சூழலே நிலவுகின்றது.
Thanks for Your Comments