சுமார் 200 ஆண்டு களுக்கு முன்பு இத்தாலியில் பாதரசம் மற்றும் ஆர்சனிக் வேதிப் பொருட்களில் பதப்படுத்தி வைக்கப் பட்டிருந்த 5 மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
எகிப்தில் உள்ள பிரமிடுகளில் பல நூற்றாண்டு களுக்கு முன் வாழ்ந்தவ ர்களின் உடல்கள் பதப்படுத்த பத்திரமாக வைக்கப் பட்டுள்ளன. இவை மம்மிகள் என்ற அழைக்கப் படுகின்றன.
இந்த மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் எடுத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இத்தாலியில் 200 ஆண்டுக ளாக பத்திரமாக வைக்கப் பட்டிருந்த 5 மம்மிகளின் உடல்களை ஆராய்ச்சி யாளர்கள் கண்டெடுத்து உள்ளனர்.
விரோனா நகரில் உள்ள டிசென்ஸனோ மருத்துவ மனையில் அவை பாதுக்காக் கப்பட்டு வருகின்றது. 5 மம்மிகளின் உடல்களின் பல பகுதிகள் இன்னும் கிடைக்க வில்லை.
கழுத்து களுடன் கூடிய 5 தலைகள், ஒரு இதயம், 2 உடல்கள் ஆகியவை கிடைத்துள்ளன. சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கதிர்களின் மூலம் உடல்கள் எப்படி பாதுகாக்கப் பட்டது என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது.
இதில் பாதரசம், ஆர்சனிக் ஆகிய வேதிப் பொருட்களை உடலில் செலுத்தியோ அல்லது உடல்களை வேதிப் பொருட்களில் மூழ்க வைத்தோ பதப்படுத்தி வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
வேதிப் பொருட்களால் சாதாரண மம்மிகளை விட, தற்போது கிடைத்துள்ள மம்மிகளின் உடல் பகுதிகள் அதிக தடிமனாக உள்ளன.
தொல் பொருள் ஆராய்ச்சி யாளர்கள் மம்மிகளு க்கு செயற்கை பல், கண்கள், முடி ஆகியவை பொருத்தி ஆராய்ச்சி மற்றும் மருத்துவ படிப்பிற்காக பயன்படுத்த உள்ளனர்.
19ம் நூற்றாண்டில் மனித உடல்களை பாதுகாக்க பொதுவாக சிலிக்கான் டை ஆக்சைடு, சல்பர், சுண்ணாம்பு ஆகியவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இத்தாலியில் கண்டெடுக் கப்பட்ட உடல்களில் பாதரசம், ஆர்சனிக் போன்ற வேதிப் பொருட்கள் பயன் படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.
இது குறித்து தொல் பொருள் ஆராய்ச்சி யாளர்கள் மேலும் ஆராய்ச்சி யில் ஈடுபட்டு வருகின்றனர்.
Thanks for Your Comments