மத்திய பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூர் என்னும் இடத்தில் வசித்து வந்த பெண் தான் காதலித்து வந்த இளைஞருடன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி யுள்ளார்.
இதை யறிந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பெண் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து காதலனிடம் இருந்து வலுக்கட்டாய மாக சேலையை உருவி அரை நிர்வாணமாக ஊர் வரை இழுத்துச் சென்றுள்ளனர்.
சாதி மாறி காதலித்ததால் என்ற தண்டனையை பெண்ணின் உறவினர்கள் கொடுத்துள்ள தாக கூறப் படுகிறது. இச்சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இதுவரை எந்தவித புகாரும் வரவில்லை.
வீடியோ பார்த்த பிறகு பெண் யார் என்பதை விரைவில் விசாரிப்போம் என மெத்தனமாக போலீசார் கூறி யுள்ளனர்.
தெரிந்து கொள்ளுங்கள்
Thanks for Your Comments