சட்ட சபையில் சீன் படம் பார்த்தது தேச விரோதமில்லையே... கர்நாடக அமைச்சர் !

0
சட்ட சபையில் ஆபாசப் படம் பார்ப்பது தேச விரோதமல்ல என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் மதுசாமி சர்ச்சைக் குரிய கருத்தை தெரிவித் துள்ளார்.
சட்ட சபையில் சீன் படம் பார்த்தது



கர்நாடகத்தில் எச் டி குமாரசாமி தலைமை யிலான ஆட்சி கவிழ்ந்தது. இதை யடுத்து சட்டசபையில் பெரும் பான்மையை நிரூபித்த எடியூரப்பா முதல்வரானார். 

மேலும் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த தற்கே அவரது கட்சியிலும் கூட்டணி கட்சியிலும் இருந்த அதிருப்தி யாளர்கள் தான்.
எனவே ஆட்சியை தக்க வைக்க அதிருப்தி யாளர்களை திருப்திப் படுத்துவது என்ற முடிவுக்கு வந்த எடியூரப்பா, அதிருப்தி யாளர்களான கோவிந்த் கார்ஜோல், அஸ்வத் நாராயணன், லட்சுமண் சவடி ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி வழங்கி யுள்ளார்.

செல்போனில் ஆபாச படம்

இவர்களில் லட்சுமண் சவடி கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி கர்நாடக சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் தொலைக் காட்சிகளில் ஒளிப்பரப் பானது. 

அப்போது லட்சுமண், தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த தாக தெரிந்தது.

காங்கிரஸ் தலைவர்



அதை அமர்ந்திருந்த அப்போதைய அமைச்சர் சி.சி. பாட்டீல் எட்டி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சர்ச்சையை கிளப்பியதை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். 

அவருக்கு இப்போது அமைச்சரவை யில் இடம் அளித்தி ருப்பதை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கடுமையாக விமர்சித்திருந்தார்.

தேச விரோதம்

மாநில சட்டத் துறை அமைச்சர் மதுசாமி, சட்டப் பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல. ஆபாச படம் பார்ப்பது தார்மீக ரீதியில் தவறானது தான்.
ஆபாச படம்

அவர் எதிர் பாராத விதமாக செல்போனில் அதை பார்த்தார். அதனால் அவர் அமைச்சராக இருக்கவே கூடாது என கூறுவது தவறு. ஆபாச படம் பார்ப்பது சரியில்லை தான். ஆனால் அதன் மீதான விவாதம் தேவையற்றது என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings