ரஷ்யாவில் 47வது மாடிக்கு கொண்டு செல்லப்பட்ட கண்ணாடிக் கதவு ஒன்று கை நழுவியதில் சுமார் 500 அடி உயரத்தி லிருந்து விழுந்து சுக்குநூறாக உடைந்தது.
மாஸ்கோவில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பில் பொறுத்துவ தற்காக தொழிலாளர்கள் 47வது மாடிக்கு அதிக எடை கொண்ட கண்ணாடி ஜன்னலை கயிறு கட்டி தூக்கிச் சென்றனர்.
அப்போது கடைசி நொடியில் பிடிமானம் நழுவியதால் சுமார் 500 அடி உயரத்தில் இருந்து கண்ணாடி ஜன்னல் விழுந்தது.
கீழே விழுந்த வேகத்தில் கண்ணாடி ஜன்னல் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments