அப்படியே இருங்கள் சொன்ன இண்டிகோ.. பதறிய பயணிகள் !

0
பட்ஜெட் ரேட்டில் விமான சேவை வழங்குவதால் பிரபலமான இண்டிகோ விமான சேவை நிறுவனம், இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கி யுள்ளது. இந்த சர்ச்சை சம்பவம் குறித்து விமான ஒழுங்கு முறை அமைப்பு, விசாரிக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அப்படியே இருங்கள் சொன்ன இண்டிகோ



கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் புதன்கிழமை இண்டிகோ பல விமானங் களை ரத்து செய்தது. இதனால், பயணிகள் அவதியை எதிர் கொள்ள நேர்ந்தது.

இது பற்றி பயணி ஒருவர் கூறுகையில் 'எனது இண்டிகோ விமானம் புதன்கிழமை மாலை 07.55 மணிக்கு ஜெய்ப்பூருக்கு புறப்பட வேண்டியது. 
இருப்பினும், வியாழக் கிழமை காலை 6 மணிக்குதான் விமானம் புறப்பட்டது, நான் காலை 8 மணியளவில் ஜெய்ப்பூரை அடைந்தேன். நள்ளிரவில் விமானத்தில் ஏற்றப்பட்டு அப்படியே உட்கார வைக்கப் பட்டோம். 

எங்களை வெளியே விடவில்லை. இன்று காலைவரை விமானத்திற்கு உள்ளேயே இருந்தோம். எங்களுக்கு இரவு உணவு கூட வழங்கப்பட வில்லை' என்றார்.

விமானத்தில் இருந்த சில பயணிகள் கோப மடைந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தி யுள்ளனர். ஆதங்கத்தாலும், பதற்றத்தாலம், சில பயணிகள் தொழில் பாதுகாப்பு படையினரான சி.ஐ.எஸ்.எஃபுக்கு தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றுமாறு கதறி யுள்ளனர்.
இது குறித்து விமான ஒழுங்குமுறை அமைப்பு மூத்த அதிகாரி ஒருவரிடம் பிடிஐ செய்த நிறுவனம் கேட்ட போது, ​​"இந்த விஷயத்தை நாங்கள் விசாரிப்போம்" என்று கூறியுள்ளார். 

இது குறித்த கேள்விக்கு இண்டிகோ இதுவரை பதிலளிக்க வில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings