கழுத்தை துளைத்த கம்பி.. உயிர் கொடுத்த அரசு மருத்துவர்கள் !

0
மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் குருசாமி. இவர் சென்ற வாரம் இரவு தன் நண்பருடன் குடி போதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாகக் கூறப்படுகிறது. 



அப்போது, மேலவாசல் அருகில் நிலை தடுமாறி சாலை கட்டுமானப் பணி நடந்து கொண்டு இருந்த குழிக்குள் விழுந்து விட்டார். 

அக்குழிக்குள் இருந்த 4 அடி நீள கூர்மையான இரும்புக் கம்பி குருசாமியின் கழுத்துக்குக் கீழே முன் பக்கமாக நெஞ்சகப் பகுதியில் நுழைந்து முதுகுக்குப் பின்னால் வந்து விட்டது. 

அவருடைய நண்பருக்குச் சிறிய காயம்தான் என்பதால் உடனடியாக எழுந்த அவர் அங்கிருந்த மக்களுக்கு விபத்தை தெரியப் படுத்தினார். பின்னர் 108 அவசர ஊர்தியில் குருசாமி, மதுரை அரசு ராசாசி மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.
மருத்துவ மனைக்கு அவர் அழைத்து வரப்பட்ட உடனே அவருக்கு உரிய முதலுதவி அளிக்கப் பட்டது. ``அங்கிருந்த கிராம மக்கள் அவரை குத்தியிருந்த கம்பியை எடுக்காதது அவரின் அதிர்ஷ்டம் "என்று கூறினார் மருத்துவர். 

குருசாமி அனுமதிக் கப்பட்ட 2 மணி நேரத்திலேயே அவருக்கு அறுவை சிகிச்சை ஆரம்பிக்கப் பட்டது. இரவு 11.30 மணிக்கு ஆரம்பித்த அறுவை சிகிச்சை நான்கு மணி நேரம் நடைபெற்றது. 

பின்னர் வெற்றிகரமாக அந்தக் கம்பி உடலிலிருந்து அகற்றப் பட்டது. கம்பியை அகற்றும் போது ஏற்பட்ட ரத்த நாளச் சிதைவுகளும் சரி செய்யப்பட்டன.

சவாலான இந்த அறுவை சிகிச்சை க்குப் பின் தேறிவரும் குருசாமி யின் சகோதரன் கணேஷ் நம்மிடம் கூறுகையில், ``சென்ற திங்கட்கிழமை 7.30 மணியளவில் என் அண்ணன், 

நண்பருடன் வண்டியில் வரும் போது மதுரையில் மேலவாசல் அருகில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் இடத்தில் உள்ள குழியில் விழுந்து விட்டார். அங்கிருந்த நாலடி இரும்புக் கம்பி கழுத்தில் முன்பக்கம் குத்தி முதுகுப் பக்கம் வந்து விட்டது. 

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனே மதுரை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக் கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் குழு, சிகிச்சை அளித்தது. இரவு 11.30 மணிக்கு ஆரம்பித்த ஆபரேஷன் காலை 5 மணிக்கு முடிந்தது.
தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சில நாள்கள் இருந்த பின்பு தற்போது சாதாரண வார்டில் இருக்கிறார் குருசாமி. 

இன்னும் சிறு சிறு உடல் நலப் பிரச்னைகள் இருந்தாலும் தங்கள் அண்ணன் உயிரை, உரிய நேரத்தில் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவக் குழுவிற்கு தங்கள் குடும்பம் நன்றியோடு இருக்கும்" என்றார். 



அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள நிபுணர், மயக்க மருந்து நிபுணர், நரம்பு மண்டலச் சிறப்பு அறுவை நிபுணர் என ஒட்டு மொத்த மருத்துவ ர்களின் கூட்டு முயற்சியே இந்த சிகிச்சையின் வெற்றிக்குக் காரணம் என்று மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.
மேலும் இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கூறுகையில், ``அனைத்துத் துறை சிறப்பு மருத்துவர் களும் எந்த நேரத்திலும் எங்கள் மருத்துவ மனையில் தயார் நிலையில் இருப்பதால் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்" என்று கூறினர். 

அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகையில்''அந்த இரும்புக் கம்பி மூளைக்குச் செல்லும் முக்கிய ரத்த நாளங்களான கழுத்து பெரு நரம்பு மற்றும் தமனி களையும் துளைத்து விட்டது. 

இந்த மிகச் சவாலான அறுவை சிகிச்சை யின் போது அதிக ரத்த இழப்பு ஏற்பட வில்லை என்பது சிறப்பு" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இரண்டு நாள்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குருசாமி, தற்போது நலமாக உள்ளார். அவருக்கு நீண்ட ஓய்வு தேவை என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். 

சவாலான அறுவை சிகிச்சையை சாதனையாக மாற்றிய மதுரை அரசு மருத்துவக் குழுவிற்கு வாழ்த்துகள்!!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings