நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்தவர் 24 வயதான முத்தமிழன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை அருகே உள்ள கதிரா மங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் உடற்கல்வி துறையில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும் போதி லிருந்தே காதலித்து வந்தனர். ஒரே கல்லூரியில் இருவரும் சேர்ந்து படித்துள்ளனர். அங்கேயும் அவர்களது காதல் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் மாணவிக்கு வேறு ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்தமிழன் உடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவர், மாணவியிடம் பேச பல வகைகளில் முயற்சி செய்து வந்துள்ளார். எனினும் மாணவி முத்தமிழனை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவர், மாணவியிடம் பேச பல வகைகளில் முயற்சி செய்து வந்துள்ளார். எனினும் மாணவி முத்தமிழனை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த முத்தமிழன் இரு தினங்களுக்கு முன்பு எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை க்கு முயன் றுள்ளார். ஆனால் நண்பர்கள் அவரை மருத்துவ மனையில் சேர்த்து காப்பாற்றி உள்ளனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை கல்லூரி முடிந்த உடன், உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவியிடம் தன்னை ஏன் ஏமாற்றினாய் என நியாயம் கேட்டுள்ளார்.
பெண்களுக்கு இடுப்பு புற்றுநோய் வரக்காரணம் !அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மாணவி செருப்பை எடுத்து அடிக்க முயற்சித்ததாக கூறப்படு கிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்தமிழன் கல்லூரி வளாகத்திற்கு வெளியே உள்ள கடைக்குச் சென்று, கழிவறையை சுத்தம் செய்யும், ஆசிட்டை வாங்கிச் சென்று மாணவி மீது வீசியுள்ளார்.
இதில் கண்ணில் காயமடைந்த மாணவியை வளாகத்தில் இருந்த சக மாணவர்கள் மீட்டு அண்ணாமலை நகர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
ஆசிட் வீசிய மாணவர் மீது சக மாணவர்கள் சரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்து சென்ற சிதம்பரம் போலீசார், ஆசிட் வீச்சு குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும், காயமடைந்த மாணவரையும் மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர்.
மேலும், காயமடைந்த மாணவரையும் மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர்.
Thanks for Your Comments