அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கொழுப்புச் சத்து குறைவான உணவு முறையைப் பின்பற்றுவ தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டது.
இருபது ஆண்டுக ளாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் மெனோபாஸ் நிலையி லுள்ள 49,000 பெண்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
அவர்களில் 40 சதவிகிதம் பேருக்குக் கொழுப்புச் சத்து குறைவான உணவு முறையும் (லோ-ஃபேட் டயட்) மீதமுள்ளவர்கள் விருப்பப்பட்ட உணவு முறையையும் பின்பற்றி யுள்ளனர்.
ஆய்வின் முடிவில், இந்த உணவு முறையைப் பின்பற்றிய வர்களுக்குச் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 13-25 சதவிகிதம் தடுக்கப் பட்டுள்ளது.
நொறுக்குத் தீனி என்பதே ஆரோக்கியக் கேடு !
அதே போன்று முதுமை காரணமாக ஏற்படும் இதயப் பிரச்னை களுக்கான வாய்ப்பும் 15-30 சதவிகிதம் குறைந் துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய ஆய்வாளர் கேர்நட் ஆண்டர்சன், `ஒவ்வோர் உணவு முறைக்கும் ஒவ்வொருவித நன்மை இருக்கும்.
அவற்றில் பெரும் பாலானவை குறுகிய காலத்துக் கான நன்மையாக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த `லோ-ஃபேட் டயட்' அப்படியல்ல. நீண்ட நாள்களுக் கான பலனைத் தரும்.
அனைத்துப் பெண்களும் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது நல்லது... ஆய்வாளர்கள்
உதாரணமாக, நாங்கள் ஆய்வுக்குட் படுத்திய 40 சதவிகிதப் பெண்களில் யாருக்குமே ஒப்பீட்டளவில் மற்றவர்களை விட பெரிய மாற்றங்களை முதல் ஒன்பது வருடங்களில் கண்டறிய முடிய வில்லை.
தொடர் கண்காணிப்பு க்குப் பிறகு, அதாவது இருபது ஆண்டுகளின் முடிவில் பலன்கள் முழுமையாகத் தெரிய வந்தன.
கொழுப்புச் சத்து குறைவான காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நன்மைகள் பெண்களுக்கு சாத்தியப்படும்.
அனைத்துப் பெண்களும் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள இப்பொழுதே முயற்சியைத் தொடங்குவது நல்லது' எனக் கூறியுள்ளார்.
Thanks for Your Comments