முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படாததால் தூக்கமில்லாமல் இரவு அவதிக் குள்ளானதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்ய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிக ளால் கைது செய்யப் பட்டார்.
இதையடுத்து ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு மீது நேற்று மீண்டும் விசாரணை நடத்தப் பட்டது.
அப்போது சிபிஐ கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஷைனி, சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தர விட்டார்.
கோரிக்கை
பின்னர் அவர் திகார் சிறைக்கு அழைத்து செல்லப் பட்டார். அங்கு அவர் 19-ஆம் தேதி வரை இருப்பார்.
இந்த நிலையில் தனக்கு தனி அறை, மேற்கத்திய கழிப்பறை, தனி கட்டில், மெத்தை ஆகிய வற்றை கேட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
சிதம்பரம்
இதையடுத்து சிறையில் பொருளாதார குற்றவாளிகளை அடைக்கும் பிரிவுக்கு அழைத்து செல்லப் பட்டார். அங்கு அவருக்கு 7-ஆம் எண் கொண்ட அறை ஒதுக்கப் பட்டது.
இசட் பிளஸ் பாதுகாப்பை அனுபவித்து வந்த சிதம்பரத்து க்கு சிறப்பு வசதிகள் ஏதும் வழங்கப்பட வில்லை.
சிறை நிர்வாகம்
அவர் சிறையில் உலவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறைக்கு தனது மூக்குக் கண்ணாடியையும் மருந்துகளை எடுத்துச் செல்ல சிதம்பரம் விரும்பியதை அடுத்து அவற்றை கொண்டு வர சிறை நிர்வாகம் அனுமதித்தது.
தலையணை
அவரது அறைக்கே அன்றாட பத்திரிகைகள் வரும். சிறை நூலகத்தையும் டிவியையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன் படுத்திக் கொள்ளலாம்.
இந்த அறை வழக்கமான அறை தான். சிதம்பரத்துக்கு தலையணை, கம்பளி மட்டுமே வழங்கப்பட்டது.
திகார் சிறையில்
ஜாமீன் கிடைக்கும் என வெகுவாக நம்பியிருந்த சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேற்று முதல் நாள் இரவு தூக்கமில்லாமல் தவித்தார்.
பின்னர் இன்று காலை 6 மணிக்கு அவருக்கு டீ, பிரட், உப்புமா, கஞ்சி ஆகியன வழங்கப் பட்டது.
முன்னாள் அமைச்சராக, இன்னாள் எம்பியாக பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்த சிதம்பரம் திகார் சிறையில் தூக்க மில்லாமல் தவித்தது அவரது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியது.
Thanks for Your Comments