நடு ரோட்டில் வியர்க்க விறுவிறுக்க நவீன டிராபிக் ராமசாமி !

0
நடுரோட்டில்.. வேர்க்க.. வேர்க்க.. நின்று கொண்டிருந்தார் டிஆர்பி ராஜா.. நவீன டிராபிக் ராமசாமியாக உருமாறி நின்றிருந்த அவரை கண்டு மக்கள் பூரித்து போயினர்.
நவீன டிராபிக் ராமசாமி



மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா.. ஒரு பெரிய கட்சி தலைவர் டிஆர் பாலுவின் மகன் என்ற பந்தாவெல்லாம் இவரிடம் எப்போதுமே பார்க்க முடியாது.
பேச்சு திறமையை கண்டு, ஜெயலலிதாவே இவரை பாராட்டி வாழ்த்து சொன்னவர். அடிக்கடி சோஷியல் மீடியாவில் இவரது பெயர் அடிபட்டு கொண்டே இருக்கும். 

இதற்கு காரணம், இவரது மக்கள் பணியே.. மக்கள் பணி என்றால் வழக்கமான துறை ரீதியான பணிகள் வேலை மட்டும் இல்லை.. வெகுஜன மக்களுடன் தன்னையும் இணைத்து கொண்டு செயல்படுவார்!

விஏஓ

இப்படித்தான், மன்னார்குடி யில் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த நீர்நிலைகளை ஆய்வு செய்ய விஏஓ வர மறுத்ததாக ஊர்மக்கள் எம்எல்ஏ ராஜாவிடம் சொல்லவும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பழம், பூ, வெற்றிலை பாக்கு என தாம்பூலத் தட்டுடன் சென்று விட்டார் ராஜா. 
விஏஓவிடம் இந்த தாம்பூலத்தை தந்து ஆய்வு செய்ய வருமாறு சொன்னார். இதை தொகுதி மக்கள் இன்று வரை மறக்கவே இல்லை.

டிராபிக் ஜாம்

இந்நிலையில், திடீரென எம்எல்ஏ ராஜா நடுரோட்டில் நின்று கொண்டிருந்தார். அது பெரிய விசாலமான சாலை என்று சொல்லி விட முடியாது. குறுகலான சாலைதான்.. ஆனால் வாகனங்கள் நிரம்பி வழிந்தன.. 

எதனால் டிராபிக் ஜாம் ஆகிவிட்டது என்று தெரியவில்லை.. லாரி, பஸ், டூவீலர்கள் என அடைத்து கொண்டு நின்ற சாலையின் நடுவே நின்றிருந்தார் எம்எல்ஏ.

வியப்பு
டிஆர்பி ராஜா



டிராபிக் போலீஸ் அங்கு நின்றிருந்தாரா என்று தெரியவில்லை.. வியர்க்க வியர்க்க.. போக்கு வரத்தை வேக வேகமாக சரி செய்து கொண்டிருந்தார் ராஜா. நடுநடுவே கர்சீப்பால் முகத்தை துடைத்து கொண்டே இருந்தார். 
இப்படி ஒரு புது "டிராபிக் போலீஸை" மக்கள் வியப்புடன் பார்த்து கொண்டே வாகனங்களில் நகர்ந்தனர். அதில் சிலர் இதை வீடியோவா கவும் எடுத்து இணையத்தில் போட்டுள்ளனர்.

டிஆர்பி ராஜா

பொதுவாக, தமிழ்நாட்டில் எங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும், அதனை உள்ளே நுழைந்து அதை சீர்படுத்துவது தான் டிராபிக் ராமசாமியின் வழக்கம். 

அதனால் தான் இந்த டிராபிக் என்ற பெயரே அவருக்கு கிடைத்தது. அது போல, நவீன டிராபிக் ராமசாமியாகவே மாறிவிட்டார் ராஜா. ஒரு எம்எல்ஏ என்றால் இப்படித் தான் இருக்கணும், 
இந்த இந்த வேலைகளை தான் செய்யணும் என்ற ஃபார்முலாக் களை எல்லாம் உடைத் தெறிந்து, மக்களிடம் நெருங்கியே இருக்கிறார் டிஆர்பி ராஜா!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings