தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசார் திங்கட்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சிலுவைப்பட்டி அருகே நின்று கொண்டிருந்த சிவகாசியைச் சேர்ந்த பால்பாண்டி, தூத்துக் குடியைச் சேர்ந்த மரிய மிக்கேல் அந்தோணி மற்றும் அவரது மகன் செங்குமார் ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் வைத்திருந்த பையில் ரூபாய் நோட்டுக்கள், மற்றும் ரூபாய் நோட்டுக்கள் அளவிலான வெள்ளைத் தாள்கள், மற்றும் மை பாட்டில்கள் இருந்தன.
சந்தேக மடைந்த போலீசார், மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், சிவகாசி திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த பால்பாண்டி இணைய தளம் வாயிலாக வெள்ளைத் தாளை ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாக செல்போன் எண்களுடன் குறுஞ்செய்தியை பரவவிட்டு மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
சமூக வலை தளங்களில் தகவல் பரவிய பிறகு பேராசை கொண்டவர்கள் பால் பாண்டியைத் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைப்பார்கள்.
அவர்களது வீட்டிற்கு செல்லும் பால்பாண்டி வெள்ளைத் தாள் கட்டையும், அதன் மீது 500 ரூபாய் நோட்டையும் வைப்பார்.
அதில் பினாயில், மஞ்சள் கலந்த கலவையை ஊற்றி கட்டி வைத்து விட்டு சில மணி நேரங்கள் கழித்து பிரித்து பார்த்தால் அந்த வெள்ளைத் தாள் கட்டுக்கள் முழுவதும் பணமாக மாறிவிடும் என்று கூறி மோசடியில் ஈடுபடுவார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டி பெரியசாமி நகரைச் சேர்ந்த 55 வயதான மரிய மிக்கேல் அந்தோணி மற்றும் 38 வயதான அவரது மகன் செங்குமார் ஆகியோர் பால் பாண்டியைத் தொடர்பு கொண்டனர்.
இதை யடுத்து தூத்துக்குடி சென்ற பால்பாண்டி வெள்ளைத் தாளில் ரசாயன மை தடவினால் அது ஒரிஜினல் ரூபாய் நோட்டாக மாறும் என்றும் அதற்கு பாதிக்குப் பாதி பணம் தர வேண்டும் என்று அவர்களிடம் டீல் பேசி ஆசை வார்த்தை கூறியுள்ளார்
பேசிய ஒப்பந்தப்படி பணத்தை வாங்கு வதற்காக சிலுவைப்பட்டி அருகே நின்று கொண்டிருந்த போது போலீசாரிடம் சிக்கி யுள்ளனர். இதை யடுத்து மோசடியில் ஈடுபட்ட சிவகாசியை சேர்ந்த பால்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தின் சிவகாசி மற்றும் கேரள மாநிலத்தில் இவர் ஏற்கெனவே கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த ஜூன் மாதம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இதே போன்று கருப்புத் தாள்களை பணத் தாளாக மாற்றுவ தாக மோசடி நடந்து குற்றவாளிகள் சிக்கிய நிலையில் மீண்டும் தூத்துக்குடி யில் அதேப் போன்ற மோசடி அரங்கேறி யுள்ளது.
Thanks for Your Comments