74 வயதில் இரட்டை குழந்தைகள் - ஆந்திர மூதாட்டி சாதனை !

0
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தக்‌ஷராமம் பகுதியை சேர்ந்தவர் ராஜா ராவ். இவருக்கும் மங்கம்மா (74) என்பவருக்கும் 1962-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 
74 வயதில் இரட்டை குழந்தைகள்




இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இதனால் ஒரு குழந்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் நீண்ட காலமாக பல்வேறு மருத்துவர் களை அணுகி சிகிச்சை பெற்று வந்தனர். 

ஆனால் சிகிச்சை யில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. முயற்சியை கைவிடாத மங்கம்மா தம்பதியினர் 2018-ம் ஆண்டு நவம்பரில் குண்டூரில் உள்ள அகல்யா மருத்துவ மனைக்கு வந்தனர். 
மருத்துவ மனையின் டாக்டர் ஷானக்கயலா அருணா இந்த சவாலான சாதனையை ஏற்றுக் கொண்டார். மங்கம்மாவின் உடல் நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள் குழந்தை பெற்றெடுப்ப தற்கான முழு உடல் தகுதி பெற்றிருப்பதை உணர்ந்தனர். 

இதை யடுத்து, ஜனவரி மாதம் ஐவிஎஃப் மூலம் செயற்கை கருவூட்டல் நிகழ்த்தப் பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப் பட்டிருந்தார்.




இந்நிலையில், மங்கம்மா தனது 74-வது வயதில் சிசேரியன் முறையில் இரட்டை பெண் குழந்தை களை இன்று பெற்றெடுத்தார். தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனது 74-வது வயதில் இரட்டை குழந்தை களை பெற்றெடுத்ததன் மூலம் அதிக வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண் என்ற கின்னஸ் சாதனையை மங்கம்மா நிகழ்த்தி யுள்ளார்.

இதற்கு முன்னதாக 2006-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் தனது 66-வது வயதில் குழந்தை பெற்றதே கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings