ஹைட்ரோ கார்பன்கள் என்றால் என்ன?

0
ஹைட்ரோ கார்பன்கள் என்பவை ஆக்சிஜனின் உதவியோடு எரிந்து ஏராளமான சக்தியை உமிழும் எரிபொருட்கள்.
ஹைட்ரோ கார்பன்



ஹைட்ரோ கார்பன் களை எரிக்கும் போது வெளியாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எந்திரங்கள், மோட்டார்கள், மின் நிலையங்கள் இயங்குகிறது.
முகத்தில் உள்ள ரோமங்களை அகற்றுவதற்கு என்ன செய்யலாம்?
பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்ற வற்றை மொத்தமாக ஹைட்ரோ கார்பன்கள் என்றழைக் கிறோம்.

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டம்

நாடெங்கும் சிறு சிறு அளவுகளில் ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருக்கும் நிலப்பரப்புக் களை அரசு கண்டு பிடித்திருக்கிறது.

சிறிய அளவிலேயே இருப்பதாலும், தோண்டி எடுக்க நிறையச் செலவாகும் என்பதாலும், அரசு அந்தப் பொறுப்பை தனியார் நிறுவனங் களத்திடம் ஏலத்திற்கு விடுகிறது.

இந்தியாவில் மொத்தம் 31 நிலப்பகுதிகள் (Discovered Small Field) தேர்வு செய்யப் பட்டுள்ளது.  இதில் தமிழகத்தின் புதுக்கோட்டை யில் உள்ள நெடுவாசல் பகுதியும், மற்றும் காரைக்கால் பகுதியும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

அதே போல், இந்தியாவின் மற்ற மாநிலங்க ளான அசாம் மாநிலத்தில் 11 இடங்களும், ஆந்திர மாநிலத்தில் 4 இடங்களும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும்,

மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் குஜராத் மாநிலத்தில் 5 இடங்கள் என இதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.

அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய் 22 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவைத் தோண்டி யெடுக்கும் ஒப்பந்தங் களை மத்திய அரசு வடிவமைத் திருக்கிறது.

புதுக்கோட்டை யில் உள்ள நெடுவாசல் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹைட்ரோ கார்பன் வயலை கர்நாடகாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஜெம் லெபராட்டரிக்கு மத்திய அரசு ஏலத்தில் விற்றிருக்கிறது. 
ஹைட்ரோ கார்பன்களில் ஒரு வகையான மீத்தேன் எடுப்பதற்கான திட்டம் தமிழ் நாட்டில் ரத்து செய்யப்பட்டு இருக்கும் சூழ்நிலை யில் மீண்டும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஏன் இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது ?
ஒரு வகையான மீத்தேன்



► இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதற் காகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

► எரிவாயு உற்பத்தி க்கான முதலீட்டை அதிகப்படுத்து வதற்கும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

► இதன் மூலம் எரி பொருட்களுக் கான விலை நிர்ணயம் செய்வதில் மாற்றங்கள் ஏற்படும்.

► எரிபொருட்கள் இறக்குமதி செய்வது கணிசமாக குறையும்.

ஏன் இந்தத் திட்டத்தை இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் எதிர்க் கிறார்கள் ?
► விளைநிலம் பாழ்நிலம் ஆகும்.

► நிலத்தடி நீரும், நீர் நிலைகளும் அழிந்து போகும்.

► உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகும்.

► செடி கொடிகள், மரம் மட்டைகள் மறைந்து போகும்.

► கால்நடைகள் பாதிப்புக் குள்ளாகும்.

► ஹைட்ரோகார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்ற வற்றை சுவாசிப்ப தனால் அல்லது புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

► மேலும் சிறுநீரகங்கள், மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.



ஹைட்ரோ கார்பன்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings