தொழிலதிபர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் கைது !

0
சென்னை நங்க நல்லூரில், தொழிலதிபரின் வீட்டிலிருந்து நகைகளை கொள்ளை யடித்துச் சென்ற பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர். 
தொழிலதிபர் வீட்டில் கைவரிசை




நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனியைச் சேர்ந்த கிரானைட் வியாபாரி ரமேஷ், சில தினங்களு க்கு முன் சபரிமலை சென்றார். அப்போது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.

வேலை காரணமாக அவர்களும் வெளியே சென்ற சமயத்தை நோட்டமிட்ட கொள்ளை யர்கள், இரவு நேரம் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 120 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரூபாயை கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர். 
ரமேஷின் மனைவியும், குழந்தைகளும் வீடு திரும்பியபோது தான் கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது. 

இது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்ட நிலையில், பரங்கிமலை துணை ஆனையர் பிரபாகர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப் பட்டனர்.

உடனடியாக புலன் விசாரணையில் இறங்கிய போலீசார், அந்த பகுதிகளி லிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதை வைத்து, கொள்ளை யர்கள் வடநாட்டைச் சேர்ந்தவர்க ளாக இருக்கலாம் என்பதை உறுதி செய்தனர். 
அவர்கள் மத்திய பிரதேசம் தப்பிச் சென்றிருக் கலாம் என்ற தகவலின் பேரில், கொள்ளையர்கள் குறித்த தகவல் மற்றும் சிசிடிவி காட்சிகளை, தமிழக போலீசார் அந்த மாநில போலீசாருக்கு அனுப்பி யதாகக் கூறப்படு கிறது.




இதை வைத்து விசாரணையில் இறங்கிய மத்தியப் பிரதேச போலீசார், இந்தூரில் பதுங்கி யிருந்த 6 பேரை மடக்கி கைது செய்தனர். 

அவர்கள் நடத்திய விசாரணையில், கைதானவர்கள் அனைவரும் பவாரியா கொள்ளை யர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 
அவர்கள் கைதான தகவல் தமிழக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழக போலீசார் மத்தியப் பிரதேசம் விரைந்துள்ள தாகக் கூறப்படுகிறது. 

அவர்கள், பிடிபட்ட கொள்ளை யர்களை தமிழகம் கொண்டு வருவார்கள் எனவும் எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings